Monday, August 29, 2011

முஹம்மது பந்தர் அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

முஹம்மது பந்தர் ஜமாத்தார்களின் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்
(ஈத் முபாரக்)

முஹம்மது பந்தர் ஜமாத்தார்களின் இந்த வருட 2011-ம் ஆண்டு

வரி பணம் ஒரு தலைக்கட்டுக்கு - 20 ரூபாய்
பித்ரா ஒரு நபருக்கு - 50 ரூபாய்

நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேம்

இப்படிக்கு
முஹம்மது பந்தர் ஜமாத்தார்கள்

வேலை வாய்ப்பு


குவைத்தில் கீழ்காணும் பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை. முக்கியமாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் குவைத்தில் பணி புரிகிறவர்களாகவும் விசா டிரான்ஸ்பர் செய்ய கூடியவர்களாகவும் ஒரு மாதத்தில் பணிக்கு சேர கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் உடனடியாக தங்கள் பயோடேட்டாவை fiverose@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பவும்

Electrical Technicians-  05 Nos. minimum experience 6 yrs
Office Boys or Help desk executive-06 No…..10 or 10+2 just little knowledge of Computer.

Salary- 200 KD + transportation.
Planning Co-ordinator- minimum 6 years experience in Oil & Gas
HVAC Engineer- Plumbing & Fire Fighting with minimum 6 years experience
All the above candidates shall have transferable visa and can join immediately or within One month notice.

Sunday, August 28, 2011

உடல் இளைக்கச் செய்யும் கரும்புச்சாறு


Sugarcane Juice
தின்ன தின்ன திகட்டாதது கரும்பு. இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட கரும்பு மருத்துவப் பயன் கொண்டது. மித வெப்பமண்டல தாவரமான கரும்பு சர்க்கரைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் பிரேசில்தான் உலகத்திலேயே முதன்மையான நாடாக விளங்குகிறது. கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டது.

உடல் இளைக்கும்

குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயங்கள். உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்வதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Saturday, August 27, 2011

துபாயில் சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய இந்தியர்களுக்கு ஜாமீன் மறுப்பு


துபாய்:இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறி களமிறங்கியிருக்கும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணமான துபாயில் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக பேரணி நடத்திய இந்தியர்கள் எட்டு பேர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான ஜாமீன் மனுவை துபாய் பப்ளிக் ப்ராஸிக்யூசன் நிராகரித்துவிட்டது. வழக்கின் விசாரணை பூர்த்தியாகததால் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக திரண்டு போராட்டம் நடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துபாயில் ஒரு டிராவல் ஏஜன்சியில் பணிபுரியும் கேரளாவைச் சார்ந்த பிரசன்னகுமார், போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ராஜேஷ் பிஷன் தாஸ், பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஸமித் மிஷ்ரா, மத்தியபிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஹிமாம்ஷு ஜோஷி, ஹிம்மத் லால் உள்ளிட்ட எட்டு பேர்தாம் துபாய் போலீசாரால் கைதுச் செய்யப்பட்டனர்.

ஹஜ்:இந்தியாவுக்கான பங்கு ஒதுக்கீடு(quota) 10 ஆயிரம் அதிகரிப்பு


புதுடெல்லி:இந்தியாவுக்கான ஹஜ் பங்கு ஒதுக்கீட்டை சவூதி அரேபியா அதிகரித்துள்ளது. 10 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஹஜ்ஜுக்கான இந்தியாவுக்குரிய ஒதுக்கீடு 1,70,491 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,60,491 இடங்களே ஒதுக்கப்பட்டிருந்தன.

புதிதாக கிடைத்துள்ள ஒதுக்கீட்டு இடங்களை மத்திய ஹஜ் கமிட்டி மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு பங்கீடுச்செய்யும். இதுவரை கிடைத்துள்ள மனுதாரர்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கான ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும்.

40 ஆயிரம் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சவூதி அரேபியா நாட்டு ஹஜ் துறை அமைச்சர் புஆத் ஃபர்ஸியுடன் ஜித்தாவில் வைத்து நடத்திய சந்திப்பில் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

விரைவில் 10 ரூபாய் ப்ளாஸ்டிக் நோட்டு!


Plastic Currency Notes
டெல்லி: இந்தியாவில் விரைவில் ப்ளாஸ்டிக் நோட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நமோ நாராயணன் மீனா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன.

ஆனால் இவை அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மை கொண்டதாக உள்ளன.

இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. இந்த பாலிமர் (ப்ளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Thursday, August 25, 2011

கவிதைகள்


லட்சத்தில் நகை விற்று;

ரொக்கத்தைச் சொச்சமாக்கி;
மிச்சத்தைத் தவணையாக்கி;
பொன்னானப் பெண்களிடம்
புன்னகையைப் பரிசாக்கி
வழியனுப்புவான்;
சாதி மதப் பேதமின்றி;
சாத்தானியச் சாட்டையால்
சாமரம் வீசி;
அழகானப் பெண்களை அழவைப்பான்;
திடீரென்று மிச்சத்தைக் கேட்டு
மிரளவைப்பான்;
குடும்பத்தைக் கரைச் சேர்க்க;
கரைத் தாண்டியக்
கணவன்மார்களின்
மனைவிமார்களைப்
படித்தாண்டவைப்பான்;
மிச்சத்தைக் கேட்டு;
எச்சமாக்கத் துடிப்பான்!
நகையை வியாபாரமாக்கி;
நங்கையை விபச்சாரியாக்கி;
பொறுக்கி எடுத்த நகைக்கடையின்
பொருக்கி இவன்;
சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன்!

IIMஇல் MBA படிக்க ...

இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிகச் சம்பளம் பெற்றுத் தரும் படிப்பு IIM (Indian Institute of Management)இல் பயிற்றுவிக்கப்படும் MBA படிப்புதான். அதிக பட்சமாக ஒரு வருடத்திற்கு ஒருகோடி (மாதம் 8 லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்படி அதிகச் சம்பளம் தரும் இந்தப் படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.  இதில் முஸ்லிம்களையும் சேர்த்து, பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.

மேலாண்மைப் படிப்புகள் (MBA) படிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட கல்வி நிறுவனம்தான் IIM (Indian Institute of Management). தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் 13 இடங்களில் IIM இயங்கி வருகிறது. உலக அளவில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மைத் துறையில் மிகப் பெரிய பொறுப்புகள் வகிப்பவர்கள் இந்த IIMஇல் படித்தவர்கள்தாம். மிகப் பெரிய நிறுவங்களை நிர்வகிக்ககூடிய அளவிற்கு உலகத் தரத்தில் இங்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதுவே உலகின் முன்னணி நிறுவங்களை இங்கு ஈர்க்க காரணமாகின்றது.

ஜாதிப் பெயர்களைக் கொண்ட ஊர்களின் பெயர்களை மாற்ற அரசு உத்தரவு!

ஜாதிப் பெயர்களைக் கொண்ட கிராமங்கள் மற்றம் நகரங்களின் பெயர்களை மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தின் பல பகுதிகளிலும் அந்தந்தப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஜாதிகளின் பெயர்களில் பல கிராமங்கள் அமைந்துள்ளன. இவை அரசு கெஜட்டிலும் இடம் பெற்றுள்ளன. 

இவ்வாறு ஜாதிப் பெயர்களில் கிராமங்களின் பெயர்கள் இருப்பது மற்ற சமுதாயத்தினரை புண்படுத்துவதாகப் புகார்கள் கூறப்பட்டன. இதனால், ஊர்களின் ஜாதி பெயரை அகற்றி, தமிழ் பெயர் வைக்க, அரசு தீர்மானித்துள்ளது. 

தற்போது ஜாதிப் பெயர்களை உடைய கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து கேட்பர். பெயர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு கெஜட்டில் வெளியிடப்படும். 

முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

எந்நேரமும் தயாராக இருங்கள். .

ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்.... உன்னை குளிப்பாட்டுவார்கள்... நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். . அது தான் மௌவுத் (மரணம்)

Monday, August 22, 2011

அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி உத்தரவு

டெல்லி: டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.

நாட்டையோ அல்லது மண்ணையோ வழிபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும், 10 மாதம் தனது கருவில் வளரும் குழந்தையை வளர்த்துப் பெற்றெடுக்கும் தாயை வழிபடுவதையே இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எனவே இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Sunday, August 21, 2011

Eid Al Fitr holidays announced for UAE public sector

Dubai: The Eid Al Fitr holiday for UAE federal ministries and departments will start on Sunday, August 28 and end on Thursday, September 1, local daily Gulf News reported on Sunday citing a government circular.

Work will resume on September 4, the report said citing a circular issued by Humaid Obaid Al Qutami, Minister of Education and Chairman of the Federal Human Resources Authority.

25ல் துபாயில் இஸ்லாமிய கேள்வி, பதில் நிகழ்ச்சி:

துபாய்: துபாயில் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி வரும் 25-ம் தேதி இரவு 10 மணிக்கு துபாய் முராகாபாத் சாலை கோரல் தேய்ரா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு தாருல் உலூம் ஸபீலுர் ரஷாதி அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி முஃப்தி ஏ. சைபுதீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் கலந்து கொள்கிறார். மார்க்க சம்பந்தமான கேள்விகளை அவரிடம் கேட்கலாம். அவர் தொடுக்கப்படும் வினாக்களுக்கு பதிலும், விளக்கமும் அளிக்கவிருக்கிறார்.

இந்த இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 7346756 / 055 617 8543 / 055 9828612 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, August 20, 2011

பெற்றோரை நேசிப்போம்

அல்லாஹ்விற்க்கு மிக விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்குவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும் என பதிலளித்தார்கள். அதற்கடுத்தது எது? என்றேன். பெற்றோருக்கு நன்மை செய்வது என்றார்கள். அதற்கடுத்தது எது? என்று கேட்டேன். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) புகாரி, முஸ்லிம்.

அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! அவன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்: சொர்க்கம் செல்லாதவன் என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 4628)

தற்பெருமையும், ஆணவமும் கொன்ட ஒவ்வொருவரும் நரகவாதியே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ }
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.திருக்குர்ஆன்.31:18.
''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).திருக்குர்ஆன்.31:19.
 தன்னைப் போன்று எவரும் உண்டா ?  என்ற மமதை சிலருக்கு வரும். அது வந்து விட்டாலே   உலக வாழ்க்கையை ஆடம்பரமாகவும்சொகுசாகவும் வைத்துக் கொள்ளத் தூண்டும்சொகுசும் ஆடம்பரமும் வந்து விட்டால் தனக்கு கீழுள்ளோர் மீது ஆதிக்கம் செலுத்தத் தூண்டும்தன்னை மதிக்காதவர் மீது வெறுப்பைத் தூண்டும்தன்னை சமமாக கருதுபவரை புறக்கனிக்கத் தூண்டும். 

பர்தாவை அகற்ற மறுத்தால் சிறை.. ஆஸ்திரேலியா புதிய சட்டம்

ல்போர்ன்: போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த சட்டத்தின்படி போலீஸ் சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவை தவிர போலீசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும்.

சோதனையின்போது, அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும்.


முஹம்மது பந்தர் தராவீஹ் தொழுகை வீடியோ(VIDEO).

முஹம்மது பந்தர் ஜிம்ஆ பள்ளிவாசலில் நடைப்பெற்ற தராவீஹ் தொழுகை வீடியோ(VIDEO).





Friday, August 19, 2011

எளிமையாக அதிக நன்மை


அதிக நன்மைகளை ஒரே நேரத்தில் பெற, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் இந்த எளிய வழிமுறைகளைக் கேளுங்கள்.

* எவரேனும் ஒருவர் ""லாயிலாஹ இல்லல்லாஹு வஸ்தஹு லாஷரீக்க லஹு அஹதன் ஸமதன் லம் யலித் வலத் யூலத் வலம் யகுன்லஹு குபுவன் அஹதுன் என்று ஓதுவாராகில் அவருக்காக இருபது லட்சம் நன்மைகள் எழுதப்படுகின்றன.

* "ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் என்னும் இந்த தஸ்பீஹை மண்ணகத்தில் கூறாத பொருள் எதுவுமே இல்லை. யார் இந்த தஸ்பீஹைக் கூறுகிறார்களோ அவர்களின் பாவங்கள் கடலை விட அதிகமாக இருந்தாலும் மன்னிக்கப்படுகின்றன.

தொழுகையின்போது பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 53 பேர் பலி


பெஷாவர் : பாகிஸ்தான் மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 53 பேர் உடல் சிதறி பலியானார்கள். 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும். பாகிஸ்தானின் பக்துன்கவா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஜம்ருத் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் ரம்ஜான் மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தொழுகை நடைபெற்றது.

சுமார் 300 பேர் குழுமியிருந்தனர். தொழுகை முடிந்து வெளியே வந்தபோது திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தகவல் அறிந்த போலீசாரும் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் 53 பேர் உடல் சிதறி பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 123 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் அருகில் உள்ள ஜம்ருத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

குவைத்தில் புனித ரமலான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள்


Kuwait city - Kuwait, Al Kuwait
குவைத்: குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் மக்களுக்கு ஏற்பாடு செய்யும் புனித ரமலான் (1432 / 2011) மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றது.

அதன் விவரம் வருமாறு,

நாள்: 20.08.2011 வெள்ளிக்கிழமை நள்ளிரவு / சனிக்கிழமை அதிகாலை (ரமலான் பிறை 20) முதல் 30.08.2011 (ரமலான் மாத கடைசி) வரை

நேரம்: தினந்தோறும் நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை

இடம்:

அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல்,

மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலையை நோக்கி உலகம்?


Morgan Stanley
அமெரிக்காவையும் ஐரோப்பாவின் சில நாடுகளையும் பொருளாதார மந்தநிலை தாக்கப் போவதாக மோர்கன் அண்ட் ஸ்டான்லி நிதி ஆலோசனை அமைப்பு எச்சரித்துள்ளது. இதையடுத்து உலகெங்கும் பெரும் பரபரப்பும் பங்குச் சந்தைகளில் மீண்டும் பெரும் சரிவும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடன் வாங்கும் தரத்தை AAA என்ற அதி உச்ச நிலையிலிருந்து AA என்ற நிலைக்கு ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்ததையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. இந் நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கத்தையும் (அமெரிக்கா) இந்தப் பக்கத்தையும் (ஐரோப்பா) பொருளாதாரத் தேக்க நிலை தாக்கப் போகிறது என்று மோர்கன் அண்ட் ஸ்டான்லி எச்சரித்துள்ளது, உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த எச்சரிக்கையால், வழக்கம்போல, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிடவே, தங்கத்தின் விலை ஒரே இரவில் சர்வதேச அளவில் பெருமளவில் உயர்ந்துவிட்டது.

Wednesday, August 17, 2011

மூன்று பத்துகள்

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமளான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமளானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.

Tuesday, August 16, 2011

ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை

ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

Sunday, August 14, 2011

ஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்


ஸஹர் உணவு: நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642).

நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே வித்தியாசமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி, நூல்கள்: முஸ்லிம்2001, நஸயீ 2168, திர்மிதி 643).

பஜ்ருக்கு அரைமணி நேரத்திற்கு முன்பு எழுந்து ஸஹர் உணவு உண்பது நல்லது. ஸஹர் நேரத்துக்கு எழுந்து உண்ணாமல், வழக்கமான இரவு உணவு வேளையில் சாப்பிட்டு விட்டுத் தூங்கி விடும் பழக்கத்தை உடையவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது நபிவழிக்கு மாற்றமானது. ஸஹர் நேரத்தில் எழுந்து (ஒரு பேரீத்தம் பழம், தண்ணீர், பால் போன்ற) எதையாவது சாப்பிடுவது நபிவழியும் நன்மையானதுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிவுத்திறனை அதிகரிக்கும் முட்டை !


நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. நாம் சமைக்கும் முட்டையை பொருத்து கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும். முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது. பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது. காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது

முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன

தினம் ஒரு முட்டை

Saturday, August 13, 2011

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

மனிதனாக பிறந்த ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை தேர்தலில் வாக்களிப்பது. தேர்தலில் வாக்களிக்க நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் ஓட்டு போட முடியாது. (என்னது! பெயர் இருந்தும் ஓட்டு போட முடியலையா அதுக்கு நான் பொறுப்பில்ல.. வாழ்க ஜனநாயகம்). ஆனால் நம்முடைய அரசு அதிகாரிகளை பற்றி தான் நமக்கு தெரியுமே ஒருத்தன் பேரு சரியா இருந்தா அவுங்க அப்பா பேரு மாறி இருக்கும் அல்லது இரண்டுமே சரியாக இருந்தா அவனுடைய போட்டோ மாறி இருக்கும் அல்லது 20 வயது இருக்கிறவனுக்கு 80 வயது போட்டுருப்பாங்க இதெயெல்லாம் மிஞ்சும் வகையில் உயிரோட இருக்கிறவன சாக கூட அடிச்சுடுவாங்க இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்.
இதை எல்லாம் மீறி நம்முடைய விவரங்கள் சரியாக வந்தால் அந்த நீங்க அதிச்ட்ட சாலி தான். ஆனால் முன்பை போல் இல்லாமல்  இப்பொழுது இந்த பிழைகள் மிகவும் குறைந்து விட்டது. நன்றி - அரசு தேர்தல் துறை.

தஞ்சையில் இன்று அடுக்கு மாடி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் சேதம்


தஞ்சை ரெயிலடி அருகே சீனிவாசகம் பிள்ளை சாலையில் ஓரியண்டல் ஓட்டல் உள்ளது.சுமார் 100 அறைகள் கொண்ட அடுக்கு மாடியாகும்.

பிரபலமான இந்த ஓட்டலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கி உள்ளனர். இன்று காலை ஓட்டலில் திடீர் என தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ ஓட்டல் முழுவதும் பரவியது. இதனால் ஓட்டலில் இருந்து கரும்புகை வெளியே கிளம்பியது.

இதனை பார்த்த ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அலறியடுத்து ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Thursday, August 11, 2011

Wednesday, August 10, 2011

பிறக்கும் போதே பற்களுடன் பிறந்த குழந்தை

பிறக்கும் போதே பற்களுடன் பிறந்த குழந்தை(படங்கள் இணைப்பு)

குழந்தைகள் பிறந்து 6 அல்லது ஒரு வருடங்களின் பின்னர்தான் அவற்றிற்கு பல் வளர்ச்சி காணப்படும் என்பது யாவரும் அறிந்த உண்மை. கிராமமப்புறங்களில் குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் அதை ஒரு விழாவாகவே கொண்டாடும் வழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.. ஆனால் ஒரு குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தது என்றால் நம்புவீர்களா? ஆம் இந்த விசித்திர சம்பவம் Joanne Jones (31வயது) மற்றும் Lee (32வயது) தம்பதியினருக்கு பிறந்த ஒலிவர் என்றழைக்கப்படும் குழந்தைக்கே இவ்வாறு ஏற்பட்டுள்ளது.

பிறக்கும் போதே நன்கு வளர்ச்சியடைந்து இரண்டு முன்னப்பற்களோடு பிறந்து அனைவரையும்வ வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த குழந்தை. இது உலகில் மிக மிக அரிதான ஒரு சம்பவமாகும். இது பற்றி குழந்தையின் பெற்றோர் கூறுகையில் நாங்கள் சந்தோசமாகவுள்ளோம்.. காரணம் எமது குழந்தை ஒரு பல்வைத்தியராக வருவதற்கு இப்பொழுதே பதிவு செய்து வந்திருக்கிறது. அது மட்டுமல்லாது எமது குழந்தையின் பற்கள் எத்தவித விகாரங்களும் இன்றி நன்கு வளர்ச்சியடைந்து அழகாகத்தான் இருக்கிறது. இதனால் நாம் மிகவும் சந்தோசப்படுகிறோம்” என தெரிவித்தனர். பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இக்குழந்தையை பலர் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 9, 2011

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 57 லட்சம் செலவில் சரக்கு போக்குவரத்து வசதி


திருச்சி,ஆக.8- விமான நிலைய பழைய டெர்மினல் கட்டிடத்தில் 57 லட்சம் ரூபாய் சரக்கு போக்குவரத்துக்கான (கார்கோ போர்ட்) கட்டுமான பணி துவக்க பூமிபூஜை நடந்தது.
திருச்சி விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து நடக்கிறது. பயணிகள் மற்றும் விமான சேவையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் ஷார்ஜா, குவைத், கொழும்பு போன்ற இடங்களுக்கு திருச்சியிலிருந்து விமான சேவையை இயக்கி வந்தன.
இதன்பின், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை துவக்கியது. படிப்படியாக தற்போது மிகின்லங்கா, ஏர் ஏசியா, கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ், டைகர் ஏர்வேஸ் என விமான நிறுவனங்கள் அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், சென்னை போன்ற இடங்களுக்கு விமான சேவையை இயக்கி வருகின்றன.

ரூ.19 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!

அண்மைக்காலமாக தொடர் உயர்வைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவாக ரூ.19 ஆயிரத்தை நெருங்குகிறது. பவுனுக்கு ரூ.440 அதிகரிப்பு 

தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் உள்ளது. ரூ.17 ஆயிரத்தில் இருந்து வந்த ஒரு பவுன் தங்கத்தின் விலை கடந்த 3ஆம் தேதி ரூ.18 ஆயிரத்தை தொட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வாக கருதப்பட்டது. அதன் பின்னரும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.18,416 ஆக இருந்தது. நேற்று விடுமுறை என்பதால் அதே விலை நீடித்தது. 

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.440 உயர்ந்து உள்ளது. இன்று காலை ஒரு கிராம் விலை ரூ.2357-க்கும், ஒரு பவுன் (8 கிராம்) ரூ.18,856-க்கும் விற்கப்பட்டது. 

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!

தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஓர் ஏழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார். அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன! தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம்) கொடுத்தார். அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்” என்றோ அல்லது “அப்பெண்ணுக்கு நரகிருந்து விடுதலை அளித்து விட்டான்” என்றோ கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4764

உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களை பாருங்கள்


ஆடம்பர வாழ்வு வாழும் நிலையை விட்டு உங்களை நீங்கள் தற்காத்து கொள்ளுங்கள்! எனென்றால் ஆடம்பர வாழ்வு வாழக்கூடியவர் அல்லாஹ்வின் சொந்த அடியார் ஆக மாட்டார். தன்னுடைய வரவுக்கு தக்கபடி சிலவு செய்பவனும் எல்லாச்செயல்களிலும் நடு நிலையை கை கொள்பவனும் நிச்சயம் ஏழ்மையை அடைய மாட்டான். அல் ஹதீஸ்

உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களை பாருங்கள். உங்களுக்கு மேலான நிலையில் உள்ளவர்களை பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் தாழ்மையாக கருதாமல் இருப்பதற்கு துணை புரியும். நுல்: புஹாரி

செல்வம் என்பது பொருட்கள் அதிகமாக வைத்திருப்பதல்ல. போதும் என்ற மனம் படைத்திருப்பதே செல்வமாகும்.நூல்: புஹாரி

ஏழை என்பவன் மக்களிடம் சுற்றி அலைபவன் அல்ல! அவன் ஒரு கவளமோ இரு கவளமோ ஒரு பேரீச்சம் பழமோ, இரு பேரீச்சம் பழமோ கிடைத்தால் திரும்பிவிடுவான்.போதுமான வசதி இல்லாதவனே உண்மையான ஏழையாகும். அவன் தர்மம் கொடுக்கப்படும் அளவிற்கு தன்னை காட்டிக்கொள்ள மாட்டான்.மக்களிடம் தர்மம் கேட்பதற்கு முற்படவும் மாட்டான். நூல்:புஹாரி

Monday, August 8, 2011

சமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழகத்தின் அப்பீல் தள்ளுபடி


Supreme Court
சென்னை: பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் முதல் கட்டமாக 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் திமுக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறிய தமிழக அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் அறிமுகப்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தது. இதுதொடர்பாக சட்டசபையில் சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது.

ஃபித்ரா கொடுப்பவர்களே உங்களைத்தான்…!


புனிதமிக்க ரமலானில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மத்தை நபி[ஸல்] அவர்கள் நம் மீது கடமையாக்கியுள்ளார்கள்.

* இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;.
ஆண்கள், பெண்கள், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். [புஹாரி எண் 1504 ]

* நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக இஸ்லாம்


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.

உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

இளம் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் புதிய கலாசாரம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இளம் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் புதிய கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதை தடுத்து நிறுத்த பள்ளி, கல்லூரிகளில் மாணவ&மாணவிகளுக்கு ஒருபாடமாக போதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களால் எழுப்பப்பட்டுள்ளது.

மோசமான இந்த கலாசாரம் தமிழகத்தில் தற்போது பொதுமக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு மோசமான கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. பள்ளி மாணவ&மாணவிகளானாலும் சரி, வயதுக்கு வந்த இளம் பெண்களானாலும் சரி, இவர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் சம்பவங்களும், அல்லது கடத்தி செல்லப்படும் சம்பவங்களும் மிகவும் அதிகமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் தினமும் இதுதொடர்பான புகார்கள் போலீஸ் நிலையங்களில் ஏராளமாக பதிவு செய்யப்படுகின்றன.

இந்திய நண்பர்கள் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்


ஆக.12, துபாயில் இந்திய நண்பர்கள் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

துபாய் : துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கன்சல் ஜெனரல், இந்திய சமூக நல மையம் மற்றும் இந்திய நண்பர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து 12.08.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ரத்ததான முகாமினை இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது.

ரத்ததான முகாமினை இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா துவக்கி வைக்கவும், இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார் தலைமை தாங்கி நடத்தி வைக்க இருக்கின்றனர்.

ரத்ததான முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் 050 91 97 421 / 050 77 84 167 / 050 200 32 58 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் blooddonationfoi@gmail.com மற்றும் blooddonationfoi1@gmail.com ஆகிய மின்னஞ்சலிலும் தங்களது வருகையினை முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய நண்பர்கள் அமைப்பின் ரத்ததானக் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

ஃபூயூட்சர் விஷன் மற்றும் கோட்டூர் இண்டர்னேஷனல் ஆகிய நிறுவனங்கள் ரத்ததான முகாம் சிறப்புற நடைபெற அனுசரணை வழங்கியுள்ளன.

தகவல் – முதுவை ஹிதாயத்

Saturday, August 6, 2011

தஞ்சையில் ரேஷன் அரிசி பதுக்கிய மூவர் கைது


தஞ்சாவூர், ஆக. 3: தஞ்சாவூரில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றதாக மூன்று பேரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் பாதுகாப்புப் பிரிவு போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸôரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் கீழவாசல் தாசபபன்நாயக்கன் தெருவிலுள்ள ஒரு வீட்டின் முன்புள்ள கீற்றுக்கொட்டகையில் சோதனையிட்டனர்.

அப்போது கத்தியைக் காட்டி மிரட்டிய கீழவாசல் ஒட்டக்காரத் தெருவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (43), மராட்டிய தெருவைச் சேர்ந்த வன்னிராஜ் (41), தாசப்பன்நாயக்கன் தெருவைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி (41) ஆகிய மூவரையும் போலீஸôர் கைது செய்தனர்.

அந்த வீட்டிலிருந்து 15 சாக்குகளில் 750 கிலோ அரிசியும், ஐந்து சணல் சாக்குகளில் 25 கிலோ அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டக்காரத் தெருவிலுள்ள மற்றொரு வீட்டிலிருந்து 60 வெள்ளை சாக்குகளில் இருந்து 3,000 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைதான மூவரும் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முருகன் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது


Kingdom Tower
ஜெட்டா: உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரை வைத்துள்ள துபாயின் புர்ஜ் கலிபாவை மிஞ்சும் வகையில், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 1000 மீட்டர் உயரத்தில், 160 மாடிகளுடன் கூடிய மகா பிரமாண்டமான கட்டிடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என அழைக்கப்படுவது புர்ஜ் கலிபர் தான். மொத்தம் 822 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில், ஹோட்டல்கள், ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுப் போக்கு தளங்கள் என எண்ணற்ற வசதிகள் உள்ளன.

Friday, August 5, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதரர்களே !

அல் அவீர் டிரை போர்ட் கஸ்டம்ஸ் (Al Aweer Dry Port Customs) உள்ளே செயல்பட்டு வரும் அல்மெர்ஜாஹ் சீ கார்கோ அண்ட் கிளியரிங் (Al Merjah Sea Cargo & Clearing) கம்பெனிக்கு முழு நேரம் பணி புரிய ஆள் தேவை. விருப்பம் உள்ள நபர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

விசிடிங் விசாவில் இங்கு இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

எம்ப்ளாய்மென்ட் விசா தகுதியுள்ள நபருக்கு ஏற்பாடு செய்து தரப்படும். நிபந்தனைக்கு உட்பட்டது.

தகுதிகள் :
1 . ஆங்கிலத்தில் டைப்பிங் செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
2 . ஆங்கிலம் பேச தெரிந்து இருக்க வேண்டும்.
3 . கம்ப்யூட்டர் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
4 . முன் அனுபவம் இருந்தால் விரும்பத்தக்கது.

சம்பளம் : 1500 திர்ஹம்ஸ்.
தினப்படி : 10 திர்ஹம்ஸ்.
ரூம் மற்றும் சாப்பாடு கிடையாது.
வேலை நேரம் : 8.30 am To 5.30 pm
விடுமுறை : வெள்ளி மற்றும் சனிக்கிழமை

குறிப்பு : குறுகிய கால பயிற்சி சிறந்த முறையில் தற்போது வேலை செய்யும் நபரால் கொடுக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

1 . அப்துல் கரீம் - 050-6904823 - Leasing Owner
2. ஜியாவுதீன் - 050-6869030 - Current Employee

Wednesday, August 3, 2011

முஸ்லீம் பெண்களின் வெளீயூர் பயணம் (எச்சரிக்கை).



அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி. அந்த நோயாளிப் பெண் அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல் பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம்.அதுபோலத்தான் அன்றும் நடந்தது.

இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு  மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும்முடிந்து விட்டது.உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக் கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சை

நோன்பின் அவசியம்

    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

    ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)

    நோன்பின் நோக்கம்

    யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

Tuesday, August 2, 2011

நல்வழி காட்டும் ரம்ஜான் நோன்பு


முஸ்லிம்களுக்கான ஐந்து கடமைகள் முக்கியமானது. கலீமா (இறைவன் ஒருவனே; முகமது நபி அவரது தூதர் என நம்பிக்கை வைத¢தல்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்துமே அந்த கடமைகள். நோன்பு உங்களுக்கு கேடயமாக இருக்கிறது என்கிறது இஸ்லாம். தீமைகள் பக்கம் செல்வதை தடுத்து, நன்மைகளின் பக்கம் அது வழிநடத்துவதால் அதை கேடயம் என்கிறது இஸ்லாம். Ôஉங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டது போல், நோன்பு உங்களுக்கும் விதியாக்கப்பட்டுள்ளதுÕ என குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.

இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான். மற்ற நான்கு கடமைகளை நிறைவேற்றும்போது உடலால் தன்னை வருத்திக் கொள்ளும் நிலை ஏற்படாது.

சோமாலியாவில் பஞ்சம், பட்டினி படு வேகமாகப் பரவுகிறது- ஐ.நா.


Famine spreads in Somalia
ஐ.நா.: சோமாலியாவில் பஞ்சமும், பட்டினியும் படு வேகமாகப் பரவி வருவதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவு தலைவர் வெலரி அமோஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலக நாடுகள் சோமாலியா விவகாரத்தில் உடனடியாக பெருமளவில்உதவிகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. இல்லாவிட்டால் சோமாலியாவின் சில பகுதிகளில் நிலவி வரும பஞ்சமும், பட்டினிச் சாவுகளும் நாடு முழுவதும் பரவி விட வாய்ப்புள்ளது.

பல லட்சம் பேரின் உயிர்கள் இன்று அங்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உலக நாடுகளுக்கு உள்ளது. தற்போது 2 பகுதிகளில் மட்டும் பஞ்சமும், பட்டினியும் தலை விரித்தாடுகிறது. இருப்பினும் இது நாடு முழுவதும் பரவும் அபாயமும் உள்ளது.

புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்


"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.

புண்ணியம் மொழியும் கண்ணியமிகு மாதமான இம்மாதம் பாவக் கறையகற்றும் மாதமாகும். பதினொரு மாதமும் நாம் செய்த பாவங்களை கழுவி பரிசுத்தப்படுத்துவதற்காக இனிய நோன்பு வருடத்தில் ஒரு தடவை வருகிறது.

இஸ்லாம் நண்பர்களுக்கு கூகுளின் பரிசு


நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் மாத வாழ்த்துக்கள்.
 

முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த ரமலான் மாதம் மிகவும் புனிதமான நாட்களாகும். இந்த நாட்களில் நாம்  இறைவனுக்காக கடும் விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவோம். இஸ்லாம் நண்பர்கள் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும்.

உலகிலேயே மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.
Related Posts Plugin for WordPress, Blogger...