Thursday, August 25, 2011

ஜாதிப் பெயர்களைக் கொண்ட ஊர்களின் பெயர்களை மாற்ற அரசு உத்தரவு!

ஜாதிப் பெயர்களைக் கொண்ட கிராமங்கள் மற்றம் நகரங்களின் பெயர்களை மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தின் பல பகுதிகளிலும் அந்தந்தப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஜாதிகளின் பெயர்களில் பல கிராமங்கள் அமைந்துள்ளன. இவை அரசு கெஜட்டிலும் இடம் பெற்றுள்ளன. 

இவ்வாறு ஜாதிப் பெயர்களில் கிராமங்களின் பெயர்கள் இருப்பது மற்ற சமுதாயத்தினரை புண்படுத்துவதாகப் புகார்கள் கூறப்பட்டன. இதனால், ஊர்களின் ஜாதி பெயரை அகற்றி, தமிழ் பெயர் வைக்க, அரசு தீர்மானித்துள்ளது. 

தற்போது ஜாதிப் பெயர்களை உடைய கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து கேட்பர். பெயர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு கெஜட்டில் வெளியிடப்படும். 

முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...