Tuesday, July 26, 2011

இஸ்லாம்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

நோன்பு காலத்தில் இறைவன் வழங்கிய சலுகைகள்.

நோன்பு காலத்தில் இறைவன் வழங்கிய சலுகைகள்.
1. மாதவிடாய் ஏற்பட்டவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
2. நோயாளி : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
3. பிரயாணத்தில் உள்ளவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. கர்ப்பிணிப் பெண் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
5. வயது முதிந்தவர்கள் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
6. பால் கொடுக்கும் தாய் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

Sunday, July 24, 2011

சொர்க்கம் செல்லும் பாதைகளில் சில.....


நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள சொர்க்கம் செல்லும் பாதைகளில் சிலவற்றை தங்கள் முன்வைக்கின்றோம். அதன்படி செயல்படுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக.


1- ஏகத்துவமும் தூதுத்துவமும்
அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
(நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)

2- அல்குர்ஆன்
அல்குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் தூய்மையான கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)

அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதிய மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படும்வரை அது அவருக்காக பரிந்துரை செய்யும். அதுதான் தபாரக் அத்தியாயம்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதி)

Saturday, July 23, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புக்குரிய சகோதரர்களே!

துபையில் இரண்டு கம்பெனி மற்றும் ஒரு வீட்டிற்கு வேலை பார்க்க 3 டிரைவர்கள் மற்றும் Hardware items பற்றி நன்கு தெரிந்த ஒரு சேல்ஸ்மேன் தேவை!

வீட்டு வேலை என்றதும் பயப்பட வேண்டாம். சொந்தமாக தொழில் நடத்தும் ஒரு சகோதரின் மகனை பள்ளிக்கு அழைத்து சென்று வர ஒரு டிரைவர் தேவை.

டிரைவர்கள் சம்பளம் AED.1500 + Accomadation.

இதற்கு சம்மதம் என்பவர்கள் மட்டும் போன் (050-4985037) போடவும். மற்றவர்கள் தயவு செய்து போன் போட வேண்டாம்.

உதவிடுங்கள்

Bismillah ir Rahman ir Rahim
Assalamu Alaikum

Dear Tamil Brothers & Sisters in Islam, Insha Allaah please do help this Masha Allaah sweet kid ASAP.

"உதவிடுங்கள்-புத்தாநத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் அவர்களின் ஒரு வயது குழந்தை முகம்மது உசென் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட நிலையில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தால் முழுவதுமாக நோய் குணமடைய வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறுவைச் சிகிச்கைக்காக ரூ. 60 ஆயிரம் வரையிலும் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த குழந்தையின் மருத்துவ உதவிக்கு தாராளமாக உதவிடுங்கள். கைபேசி: 7708055707

I.O.B Branch-798
A/C No: 4187

Jazak Allaah Khair ♥ Jazak Allaah Firdaws ♥  Fi Amanillah ♥ ♥ ♥

இஸ்லாம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்)"என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.புகாரி 1894.

Friday, July 22, 2011

இஸ்லாம்

திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-30)

Thursday, July 21, 2011

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

1) ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ”நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா)

3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ, அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ, அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)


Wednesday, July 20, 2011

நோன்பு

நோன்பு நோற்பது ஒரு வணக்கமாகும். அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிப்பனிவதாகும். ஒரு முஃமின் நோனபு நோக்கும் போது உண்பது, குடிப்பது, உடல் உறவு, தீய வார்த்தைகளை பேசுவது போன்ற வற்றிலிருந்து அல்லாஹ்வுக்காக தன்னை தடுத்து கொள்கிறான். இத்தகைய தன்னலமற்ற தியாகத்தின் மூலமாக ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வின் திருப்பதியையும். சுவர்க்கத்தையும் பெறுகிறான்.

அல்லாஹ் கூறியதாக நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஒவ்வொரு நன்மையான காரியத்திறகும் பத்து மதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகின்றது. நோனபு எனக்குரியது அதற்கு நானே கூலிக் கொடுப்பேன். நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடேயாகும். நோன்பாலி வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்டம் கஸ்;தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்.' (அறிவிப்பாவர்: அபூஹுரைரா -ஆதாரம் திர்மிதி)

மேலும் நபிகளார் (ஸல்) கூறினார்கள் நோன்பாலிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது. மற்றது தன் நாயனை (மறுமையில்) சந்திக்கும் போது (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி)- ஆதாரம் திர்மிதி)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!"
என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். vol-2...book-30.....no-1896...​.sahih buhary

Tuesday, July 19, 2011

புனித ரமலானே வருக!


புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,

நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.

ரமலானை வரவேற்போம்

Monday, July 18, 2011

மிக்க நன்றி (அல்ஹம்துலில்லா)


உங்கள் முஹம்மது பந்தர் இணையம் ஆரம்பம் செய்து 90-வது நாளில் 15,000 பார்வையளர்கள் பார்த்துள்ளனர்(அல்ஹம்துலில்லா-எல்லா புகழும் அல்லாவுக்கே).உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.மேலும் உங்களுடைய ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


முஹம்மது பந்தர்(WebSite)
www.mohamedbunder.tk


மேலும் உங்களுடைய கருத்துகளை mohamedbunder1@gmail.com என்ற முகவரியில் தொரிவிக்கலாம்

ஈமானின் கிளைகள்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு.

ஈமானின் கிளைகள்!!!

1) அல்லாஹ்வை நம்புவது.

2) இறைத்தூதர்களை நம்புவது.

3) மலக்குமார்களை நம்புவது.

4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.

5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.

6) உலக அழிவு நாளை நம்புவது.

Sunday, July 17, 2011

எந்த சூழலிலும் படிக்கலாம்; ஜெயிக்கலாம் என்பதற்கு ஞானசேகரன் சாட்சி

எந்த சூழலிலும் படிக்கலாம்; ஜெயிக்கலாம் என்பதற்கு ஞானசேகரன் சாட்சி. பெயருக்கு ஏற்றவாறு ஞானமுள்ளவர்தான்.  அதனால்தான் ப்ளஸ்டூவில் 1154 மதிப்பெண் எடு த்து மருத்துவ கட் ஆஃப் 199.25 மதிப்பெண்களுடன் கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் சூரியபாளையத்தில் இருக்கிறது ஞானசேகரனின் சிறிய வாடகை வீடு. தமிழக அரசின் இலவச டி.வி.யும், கேஸ் அடுப்பும்தான், வீட்டிலிருந்த  விலையுயர்ந்த பொருட்கள். தன்னுடைய குடும்பக் கதையை  ஞானசேகரனே சொல்கிறார்.

‘‘என் அப்பா வீட்டிலேயே நெசவு நெய்து கொண்டிருந்தவர். நூல் விலை ஏறியதால் தொழில் செய்ய முடியாமல் கல் உடைக்கும் வேலை, கூலி வேலை என எது கிடை த்தாலும் செய்வார். தினமும் 200 ரூபாய் கூலி.

ஹஜ் பயணம் மேற்கொள்ள 3 ஆயிரம் பேர் தேர்வு!

வாணியம்பாடியில் மாநில ஹஜ் குழு சார்பில் ஹஜ் பயணிகளுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமதுஜான் பேசுகையில், “தமிழகத்தில் இந்த ஆண்டு ஹஜ்பயணம் மேற்கொள்ள 10,458 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3049 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஹஜ் பயணத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து 980 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். மேலும் கூடுதலாக இடங்களை தமிழகத்துக்கு ஒதுக்கி தர வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்” என்றார்.

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை

பாபநாசம்:தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.உதவித் தொகை பெற விரும்புவோர்,


தலைவர் மற்றும் செயலர், 
ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி, 
பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).

Saturday, July 16, 2011

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு: நிபுணர் எச்சரிக்கை

Water
லண்டன்: தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு கேடு உண்டாகும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மார்க்கரட் தெரிவித்துள்ளார்.

அதிக அளிவில் தண்ணீ்ர் குடிப்பதால் தோல் இளமையாக இருக்கும், நினைவுத் திறன் அதிகரிக்கும், உடல் எடை குறையும், சிறுநீரக பாதிப்புகள் வராது என்று ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால் தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மார்க்கரட் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்

fruit vegetable good health Fruit and Vegetable are good health diet
‘உணவு மருந்து’ என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது உண்டு ‘மருந்தே உணவு’ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப் படைக்கின்றன.அதில் இரத்த அழுத்தம் முக்கிய மானதாகும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்திற்கு இதம் தரும் நிபுணர்கள் பரிந்துரைந்த உணவுகள் எவை எனப் பார்ப்போம்.

பச்சை நிறமே பச்சை நிறமே

பச்சை இலைகளைக் கொண்ட கீரைகள், முள்ளங்கிஇலைகள், பாகற்காய்,போன்றவை குறைந்த கொழுப்புச்சத்தும் குறைந்த கலோரிகளை தரக்கூடியவையாகும். நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பச்சை கீரைகளில் போலிக் ஆசிட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. பச்சைநிற காய்கறிகள் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ள தாது உப்புக்கள் இதய நோய் ஏற்படுவதை இது 11 சதவிகிதம் குறைக்கிறது

Friday, July 15, 2011

நோன்பின் சிறப்பு

நோன்பு நோற்பது ஒரு வணக்கமாகும். அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிப்பனிவதாகும். ஒரு முஃமின் நோனபு நோக்கும் போது உண்பது, குடிப்பது, உடல் உறவு, தீய வார்த்தைகளை பேசுவது போன்ற வற்றிலிருந்து அல்லாஹ்வுக்காக தன்னை தடுத்து கொள்கிறான். இத்தகைய தன்னலமற்ற தியாகத்தின் மூலமாக ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வின் திருப்பதியையும். சுவர்க்கத்தையும் பெறுகிறான். அல்லாஹ் கூறியதாக நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஒவ்வொரு நன்மையான காரியத்திறகும் பத்து மதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகின்றது. நோனபு எனக்குரியது அதற்கு நானே கூலிக் கொடுப்பேன். நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடேயாகும். நோன்பாலி வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்டம் கஸ்;தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்.' (அறிவிப்பாவர்: அபூஹுரைரா -ஆதாரம் திர்மிதி)

மேலும் நபிகளார் (ஸல்) கூறினார்கள் நோன்பாலிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது. மற்றது தன் நாயனை (மறுமையில்) சந்திக்கும் போது (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி)- ஆதாரம் திர்மிதி)

Thursday, July 14, 2011

பணியாளர்களை நேசித்தல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்கள் பணியாளர்கள் உங்களுடைய சகோதர்கள், அவர்களை உங்களுக்குக் கீழே நியமித்தவன் இறைவனே! எனவே, ஒருவர் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் சகோதரர்க்கு தான் உண்பவற்றிலிருந்து உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதைப் போன்றே அவருக்கும் ஆடைகள் அளிக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுக்காதிருக்கட்டும். அப்படி (அவர் சக்திக்கு மீறிய பணியை) கொடுக்க நேரிட்டால் அவர்களுக்கு அப்பணியில் தாமும் உதவி செய்யட்டும்.''
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உம்முடைய பணியாளர் உமக்காக உணவைக் கொண்டு வரும்பொழது, நீர் அவரை உம்மோடு அமர்ந்து உணவருந்த அழைக்காவிடினும், அதிலிருந்து ஒரிரு கவள மேனும் அவருக்கு உணவளிப்பாயாக! அடுப்பின் வெம்மையில் சிரமம் ஏற்று அந்த உணவை சமைத்தவர் அவரே!''
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

எத்தனை முறை நம்முடைய பணியாளர்களை மன்னிக்க வேண்டும்'' என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். இறைத்தூதர் மவுனமாக இருந்தார்கள். அந்த மனிதர் மீண்டும் வினவினார். மூன்றாவது முறையும் அவர் வினவியதும், ரஸூல் (ஸல்) அவர்கள் விடை பகர்ந்தார்கள்: ''நாளொன்றுக்கு எழுபது முறை (அதவாது அதிகமதிகம்) அவரை மன்னித்து விடுவீராக''
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல் :அபூதாவூதது

சுபுஹானல்லாஹ்....

பணியாளர்களை நேசிக்க வேண்டும். என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம்.
இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கமும் இஸ்லாம் மட்டும் தான்!

Wednesday, July 13, 2011

மொபைல்போனில் 24 மணிநேர மருத்துவ ஆலோசனை: ஸ்பைஸ் வழங்குகிறது

Spice Mobile
டெல்லி: மொபைல்போன் மூலம் 24 மணிநேரமும் மருத்துவ ஆலோசனை வழங்கும் புதிய சேவையை ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் துவங்குகிறது.

இந்தியாவில் சுகாதார வசதிகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெறவில்லை. குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன.

எனவே, அனைத்து தரப்பு மக்களும் உரிய மருத்துவ ஆலோசனைகளை மொபைல்போன் மூலம் பெறும் விதத்தில், ஜியோ ஹெல்தி என்ற புதிய மருத்துவ சேவையை ஸ்பைஸ் நிறுவனம் துவங்குகிறது.

இந்த சேவையை ஸ்பைஸ் வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் பெறலாம். மற்ற நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனை திட்டத்துக்கும் இதற்கும் முக்கிய வேறுபாடு உண்டு.

ரம்ஜான் நோன்பு கஞ்சி: பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி- ஜெ உத்தரவு

சென்னை: ரம்ஜான் நோன்பு திறப்புக்காக கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் அரிசியை, மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு அனுமதி பெற்ற பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான அரிசிக்குரிய மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக பள்ளிவாசல்களுக்கு வழங்குவார்கள்.

உணவை தேடி கென்யாவுக்கு செல்லும் சோமாலியா மக்கள்

art.somali.kenya

மொகாதிஷு:கடந்த 60 ஆண்டுகளில் கடும் வறட்சியை சந்திக்கும் சோமாலியாவிலிருந்து அந்நாட்டு மக்கள் உணவை தேடி கென்யாவின் தாபாப் முகாமிற்கு கூட்டாக புலன் பெயர்ந்து வருகின்றனர். உள்நாட்டு கலகமும், பட்டினியும் அந்நாட்டு மக்களை வாட்டி வருகிறது. பயணத்தின் போது ஏராளமானோர் மரணிப்பதாக அல்ஜஸீரா கூறுகிறது. எரித்ரியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளும் கடும் வறட்சியை சந்தித்துவருகின்றன.

நான்கு லட்சம் மக்கள் தங்கியிருக்கும் தாதாப் முகாமின் நிலைமை பரிதாபகரமானது என ஐ.நா பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் மேலும் ஒரு முகாமை துவங்குமாறு கென்யாவுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமாக தாதாப் திகழ்கிறது. பட்டினியின் மூலம் உற்றார்களை இழந்தவர்களில் பெரும்பாலோர் இம்முகாமில் தங்கியுள்ளனர்.

சோமாலியாவின் பெரும்பாலான பகுதிகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல்ஸபாப் போராளிகள் உலகநாடுகளின் உதவிகளை பெறுவோம் என அறிவித்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் உதவி மொகாதிஷுவை சென்று அடைந்துள்ளது.

சோமாலியாவிற்கு மேலும் உதவிகளை அளிப்போம் என அவ்வமைப்பு அறிவித்துள்ளது. எத்தியோப்பியாவிற்கு நான்கு கோடி பவுண்டின் உதவியை அளிப்போம் என பிரிட்டன் அறிவித்துள்ளது. சோமாலியாவில் உதவிகளை அளிக்க தயார் என பிரிட்டனை சார்ந்த அமைப்புகள் அறிவித்துள்ளன.

Tuesday, July 12, 2011

செரிமானத்தை தூண்டும் சோம்பு

Fennel
அஞ்சரைப் பெட்டிக்குள்ளேயே ஆயிரம் மருந்துகள் உண்டு. அந்தளவிற்கு நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு, தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது. இலை, வேர் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. விதைகளில் இரண்டு வகை உண்டு.

பண்டைய வல்லுநர்கள் இத்தாவரத்தினை பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். மத்திய காலங்களில் இதனை சூனிய செயல்களுக்கு எதிரான தாவரமாக பயன்படுத்தியுள்ளனர்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

மொபைல்போன் பராமரிப்புக்கு சில எளிய வழிமுறைகள்

Mobile Phone
குறைந்த விலை மொபைல்போன், காஸ்ட்லியான மொபைல்போன் எதுவாயினும், அதை பராமரிக்கும் முறைகளிலேயே அதன் ஆயுட்காலம் இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாத மொபைல்போன்கள் அதன் மதிப்பை வெகுசீக்கிரத்திலேயே இழந்துவிடும். சில எளிய முறைகளை கையாண்டால், உங்கள் மொபைல்போனின் மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த முடியும். உங்களுக்காக சில எளிய வழிமுறைகள்...

தட்பவெப்பம்:

மொபைல்போன்கள் தட்பவெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதிக குளிர்ச்சியான மற்றும் அதிக வெப்பமான இடங்களில் மொபைல்போனை தொடர்ந்து வைத்திருக்க வேண்டாம். தவிர, மழைச்சாரல் அடிக்கும் ஜன்னல் ஓரங்களிலும் வைக்க வேண்டாம். இதனால், போனின் ஹார்டுவேர்கள் எளிதாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

சார்ஜ் செய்யும்போது கவனம்:

Monday, July 11, 2011

திருவையாற்றில் புறவழிச் சாலை அமைக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்:-திருவையாற்றில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

திருவையாறு காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து அரியலூர் சாலையில் காவல் நிலையம் வரையிலும், கும்பகோணம் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் வரையிலும், கல்லணை சாலையில் மகளிர் காவல் நிலையம் வரையிலும் ஏற்படும் வாகன நெருக்கடியால் போக்குவரத்து தடைப்படுவது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.

பேருந்து நிலையப் பகுதியில் கடைவீதிகள் குறுகலாக இருப்பதால், அங்கு அடிக்கடி போக்குவரத்து தடைப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து காவல் நிலையம் வரையிலான சுமார் இரண்டு கி.மீ. நீளத்தை கடப்பதற்கு 15 நிமிஷங்களுக்கும் மேலாகி விடுகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறே கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்."

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். - புகாரி - 1316

Saturday, July 9, 2011

பிள்ளையார்பட்டி பள்ளிவாசல் திறப்புவிழா அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும்..

தஞ்சாவூரிலிருந்து வல்லம் செல்லும் சாலையில்(மெடிக்கல் காலேஜ் ரோடு) பிள்ளையார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் இன்ஷா அல்லாஹ் வருகிற 15-07-2011 அன்று இறைவன் அருளால் திறக்கப்பட உள்ளது.





Tuesday, July 5, 2011

UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு

இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY / கல்லிவல்லி) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம்.

மேலதிக விபரங்களுக்கு துபாயிலுள்ள இந்திய தூதரக தொடர்பு எண்கள் 04-3971222 மற்றும் 050-7347676 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, July 3, 2011

வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – சிறப்பு கட்டுரை


  • மத்திய கிழக்கில் கத்தரில் அதிக சம்பள உயர்வு.
  • 2011 ல் ஓரளவு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • மனித வள அதிகாரிகளுக்கு அதிக சம்பள உயர்வு.
  • அதிகரிக்கும் சீனர்களின் பரவல்.
  • ஐக்கிய அரபு அமீரகம் அதிகம் விரும்பப்படும் நாடு.
மத்திய கிழக்கின் புகழ் பெற்ற வேலை வாய்ப்பு இணைய தளம் நடத்திய ஆய்வின் முடிவுகளின் சாரம் 
2011ல் வளைகுடா நாடுகளில் தனியார் நிறுவனங்களில் சம்பள உயர்வு சுமாராக இருக்கும், அதாவது 6.6 சதவிகிதம் இருக்கும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இவ்வாய்வு ஆறு வளைகுடா நாடுகளில் உள்ள 1400 நிறுவனங்களிலும் 32,000 நபர்களிடமும் எடுக்கப்பட்டது.

BSNL இண்டர்நெட் அதிரடி விலை குறைப்பு


BSNL நிறுவனம் இண்டர்நெட் சேவைகளுக்கான விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. 3.6MBPS மற்றும் 7.6 MBPS டேட்டா கார்டு விலைகள் மே 20 ஆம் தேதி முதல் குறைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து BSNL துணை பொது மேலாளர் M.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
3G யு.எஸ்.பி. போர்ட் ஹச்.எஸ்.டீ.பி. டேட்டா கார்டு 3.6 எம்.பீ.பி.எஸ் (சிங்கிள் பேண்ட்) ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.1600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 4% வாட் வரிகள் தனி.

3G யு.எஸ்.பி. போர்ட் ஹச்.எஸ்.டீ.பி. டேட்டா போர்டு 7.2 எம்.பீ.பி.எஸ். (ட்ரை பேண்ட்) ரூ.2,500 இலிருந்து ரூ.2 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 4% வாட் வரிகள் தனி..

ஈ.வி.டி.ஒ. கார்டு விலை ரூ.2500-லிருந்து அதிகபட்ச சில்லரை விலையாக ரூ.1,499 க்குக் குறைக்கப்பட்டுள்ளது"

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!


"சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

"அமெரிக்காவினதும் அதன் துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று கடந்த புதன்கிழமை (29.06.2011) தெஹ்ரானில் இடம்பெற்ற 28ஆவது சர்வதேச திருக்குர்ஆன் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஈரானிய அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை!


மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...