Saturday, December 17, 2011

மரணத்தை நினைவு கூறுவோம்

'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) திர்மிதி 2229)

எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு திரில்லிங்கான விஷயம் மரண நேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம்.

உலகில் மனிதன் தான் விதைத்து வந்ததின் பலாபலன்களின் தராதரத்தை உணர்தும் ஆரம்பக் காட்சிகளின் அரங்கேற்றமே மரண நேரம்.

Tuesday, December 13, 2011

தஹஜ்ஜத் தொழுகை

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1145, 6321, 7494
 
 Source from-http://www.maria-yoana.com

Friday, December 9, 2011

மரண அறிவிப்பு

மேலத்திருப்பந்துருத்தி அலி தெரு மர்ஹூம் வல்லம் பாவாஜி ராவுத்தர் அவர்களின் துனைவியாரும் மேலமதரஸா ஹஜ்ரத் ஹபீப் ரஹ்மான் அவர்களின் தாயாரும் ஆகிய தவக்கல்பீவி அவர்கள் இன்று [09/12/2011] இரவு 9 மணியவில் தாருல் பகாவை விட்டு தாருல் பணாவை அடைந்துவிட்டார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிரோம்.

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.  

Wednesday, December 7, 2011

குவைத்தில் பாராளுமன்ற தேர்தல்.


குவைத்தில், எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலகினர். பிரதமர் ஷேக் நசீர் அல் முஹம்மத் அல் - சபாஹ் மீது ஊழல் புகார் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர். குவைத்தில் பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியதை அடுத்து, தற்போது நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் மற்றும் அமைச்சரவை ராஜினாமாவை, குவைத் அரசர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல் - அஹ்மத், பொதுத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் தேர்தல் தேதியை அவர் குறிப்பிடவில்லை. எனினும் குவைத் அரசியல் சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எண்ணெய் வளமிக்க குவைத் நாட்டின் பிரதமரான ஷேக் நசீர் அல் முஹம்மத் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவர் பதவி விலகினார். இதனால் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலை நடத்தவுள்ளதாக குவைத் மன்னர் விளக்கமளித்ததுள்ளார்.
yarlmuslim

Tuesday, December 6, 2011

எச்சரிக்கை!


( NOTE BOOK ) மடிக்கணனிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.இவ்வாறு மடியில் வைத்து மடிக் கணனிகளைப் பாவிப்பதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இக் கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

வை-பை இல்லாமல் மடிக்கணனியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் வை-பையை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர மடிக்கணனிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Monday, December 5, 2011

ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன?


அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? (திருக் குர்ஆன் 2:114)

அன்புச் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

நீங்கள் ஒரு தனி நபராகவோ ஒரு மக்கள் குழுவினராகவோ இருக்கலாம். மனித சமுதாயத்திற்கு சிந்தனைச் சுதந்திரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, அதனைப் பலதெய்வக்கொள்கையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், மஸ்ஜிதுகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்டு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப்பின் பாபரி மஸ்ஜித் 1992ம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி ஹிந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டது. ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செய்வதற்கு நீங்களும் பல்வேறு வழிகளில் பணியாற்றலாம்!

டிசம்பர் 10 ல் சந்திர கிரகணம்!

சந்திர கிரகணம் டிசம்பர் 10 ஆம் தேதி அன்று ஏற்படுகிறது.இது இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சந்திர கிரகணம் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்டதைப் போல சுமர் 5 மணி நேரம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும்.

Sunday, November 27, 2011

உலகின் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவின் கடன் 15,033,607,255,920

உலகின் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவின் கடன் 15 டிரில்லியன் என அமெரிக்க நிதி துறை அறிவித்துள்ளது. இந்நிலை அமெரிக்க பொருளாதாரத்தில் சுமார் 99% எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள், இத்தகைய கடன் நிலை, அமெரிக்க பொருளாதார மீட்புக்கு உகந்ததல்ல என்று எச்சரிதுள்ளனர். அமெரிக்கர்கள் வரவுக்கு மீறிய செலவுகள் செய்வதும், வாங்கும் பொருட்களுக்கு கடன் அட்டைகளை பயன்படுத்திவிட்டு, கடனை திரும்ப அடைக்காமல் போவதால் அமெரிக்காவின் மாநிலங்களில் உள்ள சிறு சிறு வங்கிகள் திவாலாவதும், வங்கிகளை மீட்க அரசு நிதி உதவி செய்வதும் தொடர்ந்து நடைபெறுவதால், நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு சீனாவும், ஜப்பானும் பல்வேறு வகையான கடன் பத்திரங்கள் மூலம் அதிகபட்ச கடன்களை வழங்கியுள்ளன என்பது குறிபிடத்தக்கது.

இந்திய ரூபாய் மதிப்பு பலத்த சரிவு!

 
கடந்த சில வாரங்களாக, இந்திய நாணய மதிப்பு பலத்த வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆசியாவிலேயே மோசமான வீழ்மதிப்பையும், உலகளவில் மூன்றாவது மோசமான வீழ்ச்சியிலும் இந்திய ரூபாய் உள்ளது.
கடந்த 32 மாதங்களில் இல்லாத அளவாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.51.35 என்ற அளவில் (செய்தியின் இந்நொடியில்) உள்ளது. இந்திய ரூபாயின் இந்த வேகமான வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சரிவை தடுக்க இயலாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்நிய செலாவணியில் தேவைக்கும் இருப்புக்குமிடையே பாரிய இடைவெளி நிலவுகிறது என்று பணப் பரிவர்த்தகர் ஒருவர் கருத்து கூறினார்.

இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அயலவர் தங்கள் முதலீட்டை பெருமளவில் திரும்பப் பெற்று வருவதாலும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோருக்கு அதிக அந்நியச் செலாவணி தேவையிருப்பதாலும், இந்திய பணமதிப்பின் இச்சரிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...