Wednesday, December 7, 2011

குவைத்தில் பாராளுமன்ற தேர்தல்.


குவைத்தில், எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலகினர். பிரதமர் ஷேக் நசீர் அல் முஹம்மத் அல் - சபாஹ் மீது ஊழல் புகார் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர். குவைத்தில் பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியதை அடுத்து, தற்போது நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் மற்றும் அமைச்சரவை ராஜினாமாவை, குவைத் அரசர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல் - அஹ்மத், பொதுத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் தேர்தல் தேதியை அவர் குறிப்பிடவில்லை. எனினும் குவைத் அரசியல் சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எண்ணெய் வளமிக்க குவைத் நாட்டின் பிரதமரான ஷேக் நசீர் அல் முஹம்மத் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவர் பதவி விலகினார். இதனால் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலை நடத்தவுள்ளதாக குவைத் மன்னர் விளக்கமளித்ததுள்ளார்.
yarlmuslim

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...