Thursday, August 23, 2012

பள்ளி வாகனங்களுக்கான புதிய போக்குவரத்து விதிகள் ரெடி: ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்

 Tn School Vehicles Get New Traffic Rules Soon

சென்னை: பள்ளி வாகனங்களுக்கான புதிய போக்குவரத்து வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்த ஸ்ருதி பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து இறந்தார். கடந்த மாதம் 25ம் தேதி நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அரசு அதிகாரிகள் சோதனை செய்து புதிய கட்டுப்பாடுகள் விதி்ததனர்.

இதற்கிடையே பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய போக்குவரத்து விதிகளை வகுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் உள்பட பல தரப்பைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய போக்குவரத்து விதிகளை அமைக்க தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய போக்குவரத்து வரைவு விதிகள் தயாராக உள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் கேட்பாரின்றி கிடக்கும் ரூ.752 கோடி: கபில் சிபல்

டெல்லி: நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளில் கேட்பாரின்றி ரூ.752 கோடி இருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.


லோக்சபாவில் உறுப்பினர் ஒருவர் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்கு பற்றி கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கான பதிலை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் எழுத்துப்பூர்வமாக அளித்தார்.

அந்த பதிலில் கூறியிருப்பதாவது,

கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி கணக்குப்படி நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குளில் கேட்பாரின்றி இருக்கும் 2,49,59,446 கணக்குகளில் ரூ. 752,44,57,414.03 உள்ளது. அந்த கணக்குகளுக்கு சொந்தக்காரர்கள் அவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்ச பணம் இல்லாத கணக்குகளின் சொந்தக்காரர்களுக்கு ஆண்டுதோறும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி கேட்பாரின்றி இருக்கும் சேமிப்பு கணக்குகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், உத்தர பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மேற்கு வங்கத்தில் 20.16 லட்சம் சேமிப்பு கணக்குகளில் ரூ.107 கோடியும், தமிழகத்தில் 62.72 லட்சம் கணக்குகளில் ரூ.105.87 கோடியும், உத்தர பிரதேசத்தில் 21.74 லட்சம் கணக்குகளில் ரூ.68.61 கோடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 28, 2012

திருமண நிகழ்ச்சி


மணமக்கள்

A.ஜாபா் சாதிக் Weds J.ஷகிலா பானு

அவர்களின் திருமண நிகழ்ச்சி இன்ஷா அல்லா (30-08-2012) முஹம்மது பந்தர் நடைப்பெற உள்ளதால் தாங்கள் அனைவரும் வருகைப்புரிந்து மணமக்களை வாழ்த்தி எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்வோம்.


இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.

வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்

ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொது மக்களும்
மற்றும்
நண்பர்கள்

Sunday, March 4, 2012

ஒரு நல்லடியார் மற்றொரு நல்லடியாருக்கு செய்ய வேண்டிய கடமை

 

ஒரு நல்லடியாரை சந்தித்தால் அவருக்கு "ஸலாம்" சொல்லுங்கள்.

அவர் விருந்துக்கு அழைத்தால், அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அவர் அறிவுரை வழங்கக்கோரினால், அவருக்கு அறிவுரை வழங்குங்கள்.

அவர் உடல் நலம் குன்றி இருந்தால், அவரை சென்று பாருங்கள்.

அவர் மரணித்து விட்டால், அவருக்காக நடக்கும் "ஜனாஸா" தொழுகையில் கலந்து கொள்ளுங்கள்.

என ஒரு நல்லடியார் மற்றொரு நல்லடியாருக்கு செய்ய வேண்டிய கடமைகளாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

2012 - புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்


Friday, March 2, 2012

மின்சாரத்திற்கு புதிய ஏற்பாடு! - ஒளிரப்போகிறதா தமிழ் நாடு!

மாநிலமே, இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரியசக்தியின் மூலம் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உருவாக்கி தந்துள்ளது. அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், முதற்கட்டமாக, 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு 1கிலோவாட் சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் பேனல்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதன்மூலம் 2 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1000 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...