Thursday, April 28, 2011

திருமண அழைப்பிதழ்

பட்டாணி,ஜாபர் சாதிக்.J.Y
இல்லம் திருமண அழைப்பிதழ்
முஹம்மது பந்தர்
நிக்காஹ் (எ) திருமண அழைப்பிதழ்
அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
அன்புடையீர்! நாள் : 09-05-2011 (திங்கள்கிழமை)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயராலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும் நிகழும் ஹிஜ்ரி 1432 ஆம் வ௫டம் ஜமாத்தில் ஆஹிர் பிறை 5-க்கு (09-05-2011) திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் முபாரக்கான நன்னேரத்தில்

நீங்களும் சுலபமாக தமிழில் தட்டச்சு( Type)செய்யலாம்


தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் பயலுள்ள Software NHMWriter --

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. 
2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது. 
3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. 
4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும். 

ஊட்டச்சத்து நிறைந்த திராட்சை




கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். பண்டைய காலத்தில் ஒயின் எனப்படும் மதுபான கிப்து உள்ளிட்ட நாடுகளில் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இருந்து உலகம் முழுவதும் பயிரிடப்படும் திராட்சைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ்,இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

O.N.M.இமாம் நகர், முஹம்மது பந்தர், செல் -9047372788



Wednesday, April 27, 2011

இஸ்லாம்

அஸ்ஸலாமு அலைக்கும்..
மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்
மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்.
உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

Tuesday, April 26, 2011

குர்ஆனிலுள்ள 'துஆ'க்கள்

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!" 3:16.

Monday, April 25, 2011

குர்ஆனின் அத்தாட்சிகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்லஅல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ளமனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.

இஸ்லாம்

எங்கள்

இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!

இரண்டு இந்தியாக்கள் இருப்பதை ஏற்க முடியாது - உச்ச நீதிமன்றம்.

http://www.topnews.in/files/India_flag.jpg 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இந்தியாவை வல்லரசு எனக் கூறிக்கொள்ளும் வேளையில், மறுபக்கம் உணவின்றி மக்கள் பட்டினியால் செத்து மடிகிறார்களே என்று மத்திய அரசை காட்டமாக கேட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

ஏழை மக்களுக்கான பொது விநியோகத் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக, மக்கள் குடிமை உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்) பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.

Monday, April 18, 2011

மாணவர்களுக்கு பயன்தரும் இணைய தளங்கள்.


இன்று  எம்மை  தேடி  அத்தனையும்  எங்களின் இருப்பிடத்துக்கே  வந்து  கொன்ன்டிருக்கிறது.அன்று  நாம்  கல்வி  பெற கல்லூரிகள், நுலகங்கள் என  தேடி செல்ல  வேண்டி  இருந்தது. இன்று  அவ்வாறு 
இல்லை இணையம்  மூலம் அத்தனையும் உங்கள் உங்களின்  இல்லத்திலே  பெறமுடியும்.

அந்த  வகையில்  மாணவர்களுக்கு  பயன்தரும் இணைய  தளங்களை  பட்டியலிடுகிறேன்.

உங்கள் Laptop இன் battery life ஐ அதிகரிக்க சில 10 வழிகள்

அனேகமாக தற்போது அதிகமானவர்கள் லாப்டாப் பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் லாப்டாப் இன் battery பற்றி கவலை படுவீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அது கட்டாயமான ஒன்றாகும். எனென்றால் ஒரு ஐந்து  நிமிடத்தில் உங்களின் முக்கியமான ஒரு வேலை low battery காரணமாக தடைப்பட்டு விடலாம். எனவே உங்களுக்கு இப்போது சில வழிகளை கூறப்போகிறேன்.

Ubuntu ஐ பயன்படுத்துங்கள் : அதாவது நீங்கள் Ubuntu பயன்படுத்தினால் memory இன் தலையில் கட்டப்படும் வேலைப்பளு குறைக்கப்படும். இதனால் உங்கள் battery மற்ற OS பயன்படுத்தியபோது பயன்பட்டதை விட குறைவாகவே Ubuntu பயன்படுத்தும் போது செலவாகும். 

எந்த ஒரு Motherboard இற்கும் சரியான driver ஐ தரவிறக்குவது எப்படி?


தற்போது இந்த இடுகையில் எந்த ஒரு Motherboard இற்கும் சரியான Driver ஐ தரவிறக்குவது  எப்படி  என்றுதான் . அதற்கு உதவுவதுதான் இந்த மென்பொருள் Driver Genius Pro 10.X.X . அதாவது இந்த மென்பொருளை கணனியில் நிறுவிய பின் Scan Now  என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் system ஐ அது பகுப்பாய்வு செய்து என்ன driver பதியப்பட்டுள்ளது, எவற்றை update செய்யணும்  என்று  எல்லா  சொல்லும்.
இதை எங்கு download செய்யலாம்  ?

Friday, April 15, 2011

மரண அறிவிப்பு

15/04/2011 நமதூர் ரஹீம் நகர் 1-ம் தெருவை சேர்ந்த பட்டாணி கமால் பாட்சா அவர்களின் மச்சான் அப்துல் ஜப்பார் அவர்கள்  இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

இன்னா லில்லாகி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜணாஜா இன்று காலை 11 :30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது,

Thursday, April 14, 2011

அன்பு நண்பர்களே..,
இந்த பதிவு TYPE OF ENGINEERING COURCES( BE - Bacholer of Engineering) என்பதை பார்போம்.
நாம் நமது பிள்ளைகளை Engineering சில படிப்புகளை மட்டுமே படிக்க வைக்கிறோம்(For Example - CIVIL, ECE,EEE, IT,.). ஆனால் பல வகையான Engineering படிப்புகள் உள்ளது ஆனால் அதை நாமும் அறிந்துகொள்வதில்லை நம் பிள்ளைகலும் அறிந்துகொள்வதில்லை. பெரும்பலன மாணவர்கள் ஒரே படிப்பை எடுப்பதால் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.

Monday, April 11, 2011

குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வு 2011

     தமிழகத்தில் உள்ள  அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்  MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.

   பெரும்பாலும் மாணவர்கள் பட்ட  படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech , MCA படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வழியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்சி பெறுமாரு கூறுங்கள். இந்த மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும்.

திருவையாறு தொகுதியில் வேட்பாளர்கள் 2011


மாவட்டம் :தஞ்சாவூர்
மொத்த வாக்காளர்கள்:203842
ஆண் வாக்காளர்கள் :102097
பெண் வாக்காளர்கள் :101745
திருநங்கை வாக்காளர்கள்:0

வேட்பாளர்கள் :- கல்லணை எஸ்.செல்லக்கண்ணு (தி.மு.க)

திருவையாறு தொகுதி தி.மு.க., வேட்பாளர் கல்லணை செல்லக்கண்ணு என்ற அறங்கநாதன் (45).பிளஸ் 2 வரை படித்த இவருக்கு உமாசெல்லக்கண்ணு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உமா செல்லக்கண்ணு பூதலூர் யூனியன் தலைவராக உள்ளார். பூதலூர் ஒன்றிய செயலாளராக உள்ள கல்லணை செல்லக்கண்ணுக்கு அவரது பெயரில் 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தும், அவரது மனைவி உமா பெயரில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தும் உள்ளது.

Sunday, April 10, 2011

ELECTRICAL ENGINEERS- URGENT REQUIREMENT FOR KSA.

Dear Friends,
Greetings.

One of our major client in Dammam needs Electrical Engineers urgently with relevent experience as shown in the attached shedule. CV’s that is clearly matching to the qualification and years of  experience only need to be submitted. Very good salary and perks will be offered. Yearly contract renewable. Positions in various project sites all over KSA.

Hurry send your CV, if interested. Please circulate this mail among your circle of EE Engineers. ashfaq106@hotmail.com

 Resources Required

1
 Project Engineer (Electrical)
 NOS :3
 B.E  in Electrical Engineering
 Min 20 years of which 5+ yrs is into technical design of electrical power.
தொழுகை

நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டவற்றிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக, (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவுகூறுவது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரிதாகும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான்.
அல்குர்ஆன் 29:45

மூட்டு வலியை விரட்ட.

மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம்நாத். எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் நம் உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது. சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம். மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும்.

தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம். சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்னை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும். பாதுகாப்பு முறை விபத்து, திடீர் அசைவு, அதிக இயக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தசை வலிகளை சில நடைமுறைகளால் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நீட்டி மடக்க வேண்டும். சூடான ஒத்தடம் கொடுப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். புரதங்கள் எலும்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும். கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் எலும்புக்கு வலு சேர்ப்பதால் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் விளையாடும் போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கூட மூட்டு வலி ஏற்படலாம்.

முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் குதித்தோடும் விளையாட்டுகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு எலும்பின் இறுதிப் பகுதியில் எலும்பு வளரும் நுனி உள்ளது. இந்த வளரும் நுனி பாதிக்கப்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும். பெரியவர்கள் வேலை செய்யும் போது ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் வயதாவதால் ஏற்படும் தசை தேய்மானத்தை தடுக்கலாம். தசையை வலுவாக்கும் பயிற்சிகள் இதற்கு உதவும். முழங்கால் மூட்டு உடலின் எடையை தாங்குவதால் அதிக எடை வலியை ஏற்படுத்தும். இதை தவிர்க்க முறையான எடைக்குறைப்பு வழிகளை மேற்கொள்ளலாம். உணவில் உப்பின் அளவை குறைக்கவும். நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இடையில் நடப்பதும், கால்களை நீட்டி மடக்குவதும் நல்லது. மூட்டு பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி செயல்படுவது பாதுகாப்பானது என்கிறார்.
ஒப்பில்லாத ஓட்ஸ்

வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சுரங்கமாக விளங்குவது ஓட்ஸ். அது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க வல்லது. நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிலையாய் வைக்கும். வியாதிகள் நம் உடலை அண்டாமல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. தன்னிடத்தே நிறைந்த நார்ச்சத்தினால் மலச்சிக்கல் இல்லாமல் உடலைப் பாதுகாக்கிறது. ஒப்பில்லாத ஓட்ஸ் இத்தனை உயர்வுமிக்க ஓட்சை நாம் தினசரி உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமான ஆனந்த வாழ்வு வாழலாம். ஓட்சின் உயர்வுக்கு மற்றுமொரு காரணம், அதை சிறிதளவே உட்கொண்டாலும் வயிற்றை நிரப்பி நீண்ட நேரத்திற்கு பசி எடுக் காமல் இருக்க வைக்க வல்லது. மூன்று மணி நேரம் பரீட்சை எழுதுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்பாகவே வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டிய மாணவர்கள் காலைச் சிற்றுண்டியுடன், ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டு கிளம்பினால் 6 மணி நேரம் கழித்து மதிய உணவு உண்ணும் வரை பசி தாங்கி புத்துணர்ச்சியுடன் பரீட்சை எழுத உதவும். தினசரி ஓட்ஸ் சிறிதளவு உட்கொள்வதை வழக்கமாக்கி கொண்டால் அது இதயத்திற் கும் நன்மை பயக்கும் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். பாலின் சத்துக்கள், உலர் பழங்களின் சுவை இரண்டையும் ஓட்சின் இயல்பான சுவையுடன் சேர்த்து இம்முறை ஓட்ஸ் கஞ்சி செய்வோமா! ஓட்ஸ் கஞ்சி தேவையான பொருட்கள் ஓட்ஸ் - 4 டேபிள் ஸ்பூன் பால் - 2 கப் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள் - சிறிதளவு முந்திரி, வால்நட், பாதாம், திராட்சை - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை * 2 கப் பாலை ஒன்றரை கப்பாகச் சுண்டும் வரை நன்கு கொதிக்க விடவும். * கொதிக்கும் பாலில், ஓட்ஸ், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். * இப்போது முந்திரி, வால்நட், பாதாம், திராட்சை அனைத்தையும் பொடியாக அரிந்து அதனை கொதிக்கும் பாலில் ஏலக்காய்த்தூளுடன் சேர்க்கவும். * ஓரிரு நிமிடங்களில் இறக்கினால் ஒப்பில்லாத சத்துடைய ஓட்ஸ் கஞ்சி ரெடி. * சூடாக டம்ளரில் ஊற்றி கொடுக்கலாம். நீங்களும் சுவைக்கலாம். சுவைக்கான குறிப்பு மேலும் அதிக சுவை விரும்புவோர் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்க விடலாம். கவனிங்க...!* காய்கறிகளை கழுவிய பிறகு வெட்ட வேண்டும், அப்போதுதான் மண் துகள்கள், அழுக்கு நீங்கும். கிருமிகள் ஓரளவுக்கு அகற் றப்படும். வெட்டிய பிறகு கழுவினால் சத்துப் பொருட்கள் குறைந்து விடும். * புழு, பூச்சி தாக்கிய காய்கறியை பாதிக்கப் பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு பயன் படுத்தக் கூடாது. முழுவதையும் பயன் படுத்தாமல் இருப்பதே நல்லது. * கண் கரிக்காமல் வெங்காயம் வெட்ட வேண்டுமானால், அதன் மூக்குப் பகுதியை அகற்றிவிட்டு தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் போட்டு வைத்திருந்து பிறகு வெட்டி பயன்படுத்தலாம். அதேபோல மூக்கு அரிந்த வெங்காயத்தை அடுப்பு வெப்பத்தில் லேசாக வைத்திருந்து பிறகு அரிந்து கொள்ளலாம். * சமையலில் உப்பு கூடினால் ஒன்றிரண்டு உருளைக் கிழங்கை வெட்டிப் போட்டு வேக வைத்துக் கொள்ளலாம். கிழங்கு சேர்க்காத குழம்பு எனில் ஒரு எலுமிச்சையை பிழிந்து ஊற்றலாம். காரம் கூடினாலும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். * எப்போதுமே சாப்பிட்டபின் ஒன்றிரண்டு சீரகத்தை வாயில் போட்டுக் கொள்வது ஜீரண சக்தியை அதிகரிக்கும். * சாப்பிட்ட பிறகு சூடாக டீ, காபி போன்ற பானம் பருகினால் இதயத்திற்கு நல்லது.
நாம் அனைவர்களின் கவனத்திர்க்கு [ மார்க்க கல்வி ]

ஆயிரமாயிரம் அள்ளிக்கொடுத்து பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களே !

 அந்த பிள்ளைகளை மாதரஸாவில் சேர்க்க மட்டும் மறப்பது ஏனோ !

வாத்தியார் வீடு தேடி சென்று...பிள்ளைகளுக்கு- டியூசன் வைத்து மாதம் தவறாது பீஸ் தரும் நீங்கள் ஹஜ்ரத் வீடு தேடி வந்து.. பிள்ளைகளை ஓதிட அழைக்கையில்... எங்கள் பிள்ளைகளுக்கு அதர்க்கெல்லாம் நேரமில்லையென்று நடிப்பது ஏனோ !

 பள்ளி முதல் பல்கலை கழகம் வரை படித்து வந்து பெரிய பதவியில் இருந்தும் சிலர்..மார்க்க கல்வி மட்டும்- கற்காது போனதால் தீய வழிகளில் தேய் பிறையாகி ...அழிகின்றனர் இங்கே !

 மார்க்கக் கல்வி பண்பை தரும்! அறிவை தரும்! ஒளிமயமான வாழ்வை தரும்!

 உலக கல்வி கற்றல் தொழில், வேலை செய்து பணம் சாம்பாரிக்கலாம். இதுவும் அவசியமே! நான் மறுக்கவில்லை!

மார்க்க கல்வி கற்றலோ இறைவனை- தொழுது தினம் நன்மையை சம்பாதிக்கலாம்! ஆதலால் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் ஓதிட மதராசாவிற்க்கு அணுப்புங்கள் !

ஓதி வரும் அந்த பிள்ளைகளை வாங்கையோடு கொஞ்சி நெஞ்சம் மகிளுங்கள்.

தொகுப்பு யாவாரி ஜாஹீர் ஹூசேன்.
கல்வி உதவித்தொகை பெற வழிகாட்டும் இணையதளங்கள்

கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை.ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். இத்தளங்களை ஆராய்வதன் மூலம் கல்வி உதவித்தொகை சம்பந்தமான பல அரிய, உபயோகமான தகவல்களைப் பெறலாம்.

http://www.scholarshipsinindia.com/

http://www.education.nic.in/

http://www.scholarship-positions.com/

http://www.studyabroadfunding.org/

http://www.scholarships.com/

http://www.scholarshipnet.info/

http://www.eastchance.com/

http://www.financialaidtips.org/
என்ன மேற்படிப்பு படிக்கலாம் தொடர்...

இது நவீன உலகம். போட்டி போடும் போட்டிகள் நிறைந்த உலகம் சரியான வழிக்காட்டுதல் இல்லாவிட்டால் வாழ வழிவிடாத உலகம். நமது வட்டாரத்தில் எவ்வளவோ திறமைப்படைத்த எத்தனையோ மாணவர்கள் சரியான வழிக்காட்டுதல் இல்லாமல் மிகச் சாதாரண வட்டத்திற்குள் தன்னை அடக்கிக்குள்ளும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொடறிலே 10ம் 12ம் வகுப்பு என்ன படிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் மாணவர்களின் திறமைக்கேற்ப, விருப்பதிகேற்ப, குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதாரத்திற்கேற்ப அதிகம் அறிமுகமிழ்லாத பதிப்புல் அறிமுகம் செய்யவிருக்கின்றேன். அதே நேரத்தில் தொடரில் குறிப்பிட்டுள்ள எந்த கல்வியும் கல்வி நிறுவனமும் சிபாரிசு செய்யப்படவில்லை என்பதா குறிப்பிட விரும்புகிறேன். இந்த தொடரை அனைத்து மாணவர்ாலும் அவர்ழுடைய்யா பெற்றோர்களும் படித்து பயன் பெருமாரும் கேட்டுக்கொள்கிறேன். 1. Interior decorations கட்டிடம் காட்ட 10 லட்சம் ரூபாய் செலவலித்தால் உள் அலங்காரம் செய்ய குறைத்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்ய தயங்காத காலம் இது. கட்டிடங்களுக்கு உள் அலங்காரம் செய்வதும் ஏறக்குறைய கவிதை எழுதுவது மாதிரி அனுபவித்து செய்ய வேண்டிய விசயம். குறைந்தபட்ச கல்வி தகுதி 12ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டப்திப்பு முடித்த பிரஹு செருப்பவர்கள் அதிகமான தொழில் வாய்ப்புகளை எளிதாக பெற்றுக் கொள்ளமுடியும். வேலைக்காண வாய்ப்புகள்: இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்புகளை காட்டிலும் வெளிநாடுகளில் இப்படிப்பிற்கு அதிகமான வரவேற்பு உள்ளது. இந்தியாவில் போரியாளர்களிடம் ஆலோசகாராக சேரலாம் காத்திட உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கலாம். தனியாக இது தொடர்பான தொழில் தொடாங்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. கற்றுத்தரும் குறிப்பிட்ட இடங்கள்: மஹாராஜா மகளிர் கல்லூரி, ஈரோடு. ஜாஸ்த்டீஸ் பசீர் அகமது மகளிர் கல்லூரி, ஆவினசீலிங்கம் இந்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்சே பெருந்துறை. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் கிரஃப்த்ஸி கல்லூரி, பெரியமெடு சென்னை. அடுத்த தொடரில் மற்ற படிப்பு பற்றி இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம் By: Ponthai Malar

என்ன படிக்கலாம்....? மாணவர்களுக்கான ஒரு வழிகாட்டும் தொடர்..II

ப்ளஷ் டூ (+2) பரீட்சை முடிந்தாகி விட்டது. இனி எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்று, இந்த வயது ஒவ்வொரு மாணவனின்/மாணவியின் வாழ்க்கையிலும் இது ஒரு முக்கிய நிகழ்வு அல்லது ஒரு திருப்பு முனை என்றும் கூட சொல்லலாம். இனி என்ன செய்வது என்று மாணவர்களுக்கும் சரி, அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சரி, ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய காலமாய் இப்பொழுது இருப்பதால் இதனைப் பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. கலை, அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம் என பல்வேறு துறைகள் இருப்பினும், அதிகப்படியான மக்கள் ஆசைப்படும் துறையான பொறியியல் படிப்பு பற்றிப் பார்க்கலாம். ஏனெனில், இப்படிப்பின் வழியாக மென்பொருள் கம்பெனிகளின் மூலம் அதிக சம்பளத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்பும் இப்படிப்பைத் தேர்ந்த்தெடுப்பதற்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம். முதலில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு என்ன என்ன செய்ய வேண்டும், எந்த கல்லூரியை அல்லது எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதிலிருந்து, கடைசி நோக்கமான வேலைவாய்ப்பு வரையிலும் எல்லாவற்றையும் ஆராய்ந்து இனி வரும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் தெளிவாகக் காணலாம். பொறியியல் படிப்பு குறித்து, ஒரு சாதாரண மாணவனுக்கு உரிய சந்தேகங்களையும், தேவைகளையும் வகைப்படுத்தலாம். 1. எப்பொழுது/எப்படி விண்ணப்பிப்பது? 2. எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது? 3. கல்லூரிக் கட்டணங்கள் எந்த அளவில் இருக்கும்? 4. படிக்கும் பொழுது கவனம் கொள்ள வேண்டியவை(தேர்வுகள், ப்ராஜெக்ட்)? 5. கல்லூரிக் கலாச்சாரம் 6. மாணவர்கள் மன நலம் 7.கேம்ப்பஸ் (campus interview) இண்டெர்வியூக்கு எப்படித் தயாராவது? இப்படியாக பொறியியல் படிப்பில் சேர்வதில் இருந்து, அதை வெற்றிகரமாக முடித்து குறிக்கோளான வேலையுடனும், இந்த சமூகத்திற்குத் தேவையான ஒரு நல்ல மனிதனாகவும் உருவாக்குவது வரை, எல்லாவற்றையும் ஆராய்ந்து இங்கே சமர்ப்பிக்கவிருக்கிறோம். முதல் கேள்வியான எப்படி/எப்பொழுது விண்ணப்பிப்பது என்பது பற்றிக் காணலாம். வழக்கமாக மார்ச் மாதம் தேர்வுகள் நடைபெற்று மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும். கடந்த வருடம் மே 12 ம் தேதி வெளிவந்தது.பின்னர் உங்கள் மதிப்பெண்களைப் பொறுத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகின்றது மனதில். எப்படி மதிப்பெண்களைப் பொறுத்து விண்ணப்பிப்பது என்று?இக்கேள்விக்கு விடையளிக்க வேண்டும் எனில், முதலில் பொறியியல் படிப்பை அளிக்கும் கல்லூரிகளைப் பற்றிய தெளிவான பார்வை வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் உள்ளது. எடுthதுக்காட்டாக, நமது தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டோமானால், தற்போதைக்கு, நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. உங்களின் +2 மதிப்பென்களைப் பொறுத்தே cut off marks கணக்கிட்டு,ரேங்க் லிஸ்ட்(rank list) என்று ஒன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். இந்த இடத்தில் cut off marks பற்றி சொல்லியே ஆக வேண்டும். Cut off marks calculation(out of two hundred): 1.முதலில் உங்கள் கணிதம்,வேதியியல் மற்றும் இயற்பியல் மதிப்பெண்களை நூற்றுக்கு மாற்றிக்கொள்ளுஙகள். 2.பின்பு உங்கள் வேதியியல் மற்றும் இயற்பியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள். 3.இதை கணித மதிபெண்ணோடு கூட்டிக்கொள்ளுஙகள். இது தான் இப்பொழுது உங்கள் cut off marks.இந்த முறைப்படியே ரேங்க் லிஸ்டும் தயாரிப்பார்கள். இதன் படியே நீங்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவீர்கள். இந்த முறையானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ்வரும் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும், தேசியப் பல்கலைக்கழகங்களுக்கும் இது பொருந்தாது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அவைகளுக்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தித்தான் சீட் வழங்குவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளல் வேண்டும். இதை விட இன்னும் ஒரு தேர்வு முறையும் மிகப் பெரிய கல்லூரிகளையும் பற்றி கிராமப்புற மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று நிட்சயமாக சொல்ல முடியாது. அதாவது, இந்திய தேசிய தொழில் நுட்பக்கழகம்(IIT) இந்திய தேசிய தொழில் நுட்பக்கழகம்(NIT) இவைகளிலும் பொறியியல் பயிலலாம் என்று எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்? மற்றும் அதற்கு என்ன என்ன தேர்வுகள் எழுத வேண்டும் என்றும் அதற்கு எந்த வழிக்கல்வி பயின்று இருக்க வேண்டும் என்றும் அதற்கெல்லாம் பண வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படியெல்லாம் தயார்படுதுகிறார்கள் என்றும் இனி வரும் கட்டுரைகளில் இன்ஷா அல்லாஹ் காண்போம்.
உங்களுக்கு தெரிந்த  உள்ளுர் செய்திகள் ,திருமண நிகழ்ச்சிகள்,மரண செய்திகள்,உங்கள் வீட்டு விசேசங்கள் ,உள்ளுர் முக்கிய தொலைபேசி எண்கள்,வேலை வாய்ப்பு செய்திகள் ,கல்வி ,உள்ளுர் புகைப்படங்களை இந்த முகவாிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மரண செய்திகள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


EXAMPLE:

28/03/2011 நமதூர் .............. தெருவை சேர்ந்த  ..........................  அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.


இன்னா லில்லாகி வஇன்னாஇலைஹி ராஜிஊன்


அன்னாரின் ஜணாஜா இன்று ................... நல்லடக்கம் செய்யப்பட உள்ளது,


-----------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு தெரிந்த  உள்ளுர் செய்திகள் ,திருமண நிகழ்ச்சிகள்,மரண செய்திகள்,உங்கள் வீட்டு விசேசங்கள் ,உள்ளுர் முக்கிய தொலைபேசி எண்கள்,வேலை வாய்ப்பு செய்திகள் ,கல்வி ,உள்ளுர் புகைப்படங்களை இந்த முகவாிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருமண நிகழ்ச்சிகள்

 உங்கள் வீட்டு விசேசங்களை பதிவு செய்ய

நிக்காஹ் & விருந்து

EXAMPLE:


......................வெட்ஸ் ...................      திருமண நாள் 24-௦6-2010

.............. தெரு .......................... அவர்களின் மகன் ........... வெட்ஸ் .......... திருமண நாள் ..........  அன்று அல்லாஹ்வின் உதவியால் சொந்தங்களும் நண்பர்களும் வருகை தந்து திருமணம் சிறப்பாக நடைபெற்றது . மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.




உங்களுக்கு தெரிந்த  உள்ளுர் செய்திகள் ,திருமண நிகழ்ச்சிகள்,மரண செய்திகள்,உங்கள் வீட்டு விசேசங்கள் ,உள்ளுர் முக்கிய தொலைபேசி எண்கள்,வேலை வாய்ப்பு செய்திகள் ,கல்வி ,உள்ளுர் புகைப்படங்களை இந்த முகவாிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...