Monday, August 8, 2011

ஃபித்ரா கொடுப்பவர்களே உங்களைத்தான்…!

புனிதமிக்க ரமலானில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மத்தை நபி[ஸல்] அவர்கள் நம் மீது கடமையாக்கியுள்ளார்கள்.

* இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;.
ஆண்கள், பெண்கள், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். [புஹாரி எண் 1504 ]

* நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

இந்த தர்மம் கடமையாக்கப்பட்டத்தின் நோக்கம் நோன்புடைய காலங்களில் நாம் செய்த சிறு சிறு தவறுகளுக்கு பரிகாரமாகவும், பெருநாள் அன்று ஏழைகள் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காகவும்தான். இந்த ஃபித்ராவை பொருத்தமட்டில் 95 களுக்கு முன்னால், சில்லறை காசுகளை மாற்றி வைத்துக்கொண்டு அன்றையதினம் வீட்டு தேடிவரும் ஏழைகளுக்கு வழங்குவது அல்லது ஆலிம்ஷா-மோதினார்களிடம் வழங்குவது இப்படித்தான் பெரும்பாலான மக்கள் இந்த ஃபித்ராவை விளங்கி வைத்திருந்தனர். தமிழக அளவில் நாம் அறிந்தவரை ஒன்றுபட்ட தமுமுகதான் முதன்முதலில் ஃபித்ராவை கூட்டாக வசூலித்து அதை தமது கிளைகள் மூலம் விநியோகம் செய்தது. பின்னாளில் வேறு சில அமைப்புகளும் இவ்வாறு விநியோகம் செய்து வருகின்றன.இப்படி கூட்டாக வசூலிப்பதும், ஒரு பகுதியில் திரட்டி வேறு பகுதியில் விநியோகம் செய்வதும் மார்க்க அடிப்படையில் சரியா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

அதே நேரத்தில் பரவலாக ஃபித்ரா எல்லாதரப்பு மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தோடு வசூல் செய்யப்பட்ட இந்த ஃபித்ரா இன்று இயக்கங்களின் வலிமையை எடைபோடும் எடைக்கல்லாக மாறியுள்ளதை பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு வந்த ஃபித்ரா தொகையை சொல்லிக்காட்டி, பார்த்தீர்களா! எங்களுக்குத்தான் சமுதாயத்தின் ஆதரவு உள்ளது என்று தம்பட்டடம் அடிப்பதையும் பார்க்கிறோம். மேலும், சில இயக்கங்கள் ஃபித்ராவை விநியோகிக்கும் விசயத்திலும் கீழ்கண்ட குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

* சமுதாயத்திடம் வசூல் செய்த தொகையை விநியோகிக்கும் போது தங்கள் இயக்கம் சார்பாக இந்த கிளையில் இவ்வளவு தொகைக்கு பித்ரா பொருள்கள் விநியோகிக்கப்பட்டது என்று தங்கள் இயக்கத்தின் சொந்த பணத்தில் வழங்கியதுபோல் இயக்கத்தை முன்னிறுத்துவது.
* வறுமையின் காரணமாக ஃபித்ரா பெறும் ஏழைகளை போட்டோ எடுத்து அதை பத்திரிக்கைகளில்/தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி அவர்களின் சுயமரியாதையை கேலிக்குரியதாக ஆக்குவது
* ஃபித்ரா தொகை மீதமாகிவிட்டது என்று கூறி தங்களின் அமைப்பு சார்பில் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு அந்த தொகையை ஒதுக்கிக்கொள்வது.

இதில் எந்த விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்பதை அல்லாஹ் அறிந்தவன். அதே நேரத்தில், சுனாமி வந்து போய் பல ஆண்டுகளாகியும், அந்த சுனாமியில் சுருட்டியது யார்? என்ற விவாத அலை அவ்வப்போது எழுந்து மறைவைதை பார்க்கிறோம். எனவே நம்முடைய ஃபித்ரா முறையாக ஏழைகளை சென்றடைய ஒரே வழி நாமே நேரடியாக வழங்குவதுதான்.

பொதுவாக மார்க்கத்தில் எந்த தர்மமாக இருந்தாலும் முதலில் உறவினர்களில் இருந்து தொடங்கவேண்டும். அவ்வாறு உறவினர்களுக்கு நாம் நமது தர்மங்களை வழங்கும்போது இருமடங்கு கூலி கிடைக்கும் என்பது நபிமொழி. எனவே நமது உறவினர்களில் உள்ள ஏழைகளுக்கு நமது ஃபித்ராவை வழங்கி அவர்களை அரவணைப்போம். நமது உறவினர்களில் ஃபித்ரா பெறும் தகுதியுடைய ஏழைகள் இல்லையெனில் நமது ஊரில் உள்ள நமக்கு தெரிந்த ஏழைகளுக்கு நமது ஃபித்ராவை வழங்குவோம். ஒவ்வொருவரும் அவரவர் ஊரில் உள்ள அவரவர் உறவினர்களில் உள்ள ஏழைகளையும், பொதுவான ஏழைகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டாலே ஃபித்ரா பரவலாக சென்றடைந்துவிடும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...