Tuesday, August 9, 2011

உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களை பாருங்கள்


ஆடம்பர வாழ்வு வாழும் நிலையை விட்டு உங்களை நீங்கள் தற்காத்து கொள்ளுங்கள்! எனென்றால் ஆடம்பர வாழ்வு வாழக்கூடியவர் அல்லாஹ்வின் சொந்த அடியார் ஆக மாட்டார். தன்னுடைய வரவுக்கு தக்கபடி சிலவு செய்பவனும் எல்லாச்செயல்களிலும் நடு நிலையை கை கொள்பவனும் நிச்சயம் ஏழ்மையை அடைய மாட்டான். அல் ஹதீஸ்

உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களை பாருங்கள். உங்களுக்கு மேலான நிலையில் உள்ளவர்களை பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் தாழ்மையாக கருதாமல் இருப்பதற்கு துணை புரியும். நுல்: புஹாரி

செல்வம் என்பது பொருட்கள் அதிகமாக வைத்திருப்பதல்ல. போதும் என்ற மனம் படைத்திருப்பதே செல்வமாகும்.நூல்: புஹாரி

ஏழை என்பவன் மக்களிடம் சுற்றி அலைபவன் அல்ல! அவன் ஒரு கவளமோ இரு கவளமோ ஒரு பேரீச்சம் பழமோ, இரு பேரீச்சம் பழமோ கிடைத்தால் திரும்பிவிடுவான்.போதுமான வசதி இல்லாதவனே உண்மையான ஏழையாகும். அவன் தர்மம் கொடுக்கப்படும் அளவிற்கு தன்னை காட்டிக்கொள்ள மாட்டான்.மக்களிடம் தர்மம் கேட்பதற்கு முற்படவும் மாட்டான். நூல்:புஹாரி


மறைமுகமாக வழிபடக்கூடிய பேணுதலான செல்வந்தனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.அறிவிப்பவர்: சயீத் (ரலி) நூல்-முஸ்லீம்

ஒவ்வொரு உம்மத்தினருக்கும் ஒரு சோதனை உண்டு.எனது உம்மத்தினருக்கு செல்வமே சோதனையாகும். நூல்:திர்மிதி

''தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 148

யாருடைய உள்ளத்தில் அணுஅளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவர்க்கம் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத் முஸ்லிம் 131

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6446

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்üக்காசு, குஞ்சம் உள்ள ஆடை, சதுரக் கம்பü ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6435

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

உலகில் வாழும் எந்த மனிதனிடமும் பணத்தாசை இல்லாமல் இருக்காது. இதனால் தான் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த ஆசையை ஒரு சோதனையாக அல்லாஹ் அமைத்துள்ளான்.
நமக்கு மேல் வசதி இருப்பவர்களைப் பார்த்து, மனம் பொருமுவதை விட நமக்கு கீழான நிலையில் உள்ளவர்களைப் பார்த்து திருப்தியடைவதே நமக்கு சிறந்ததாகும்.!!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...