Saturday, August 6, 2011

தஞ்சையில் ரேஷன் அரிசி பதுக்கிய மூவர் கைது


தஞ்சாவூர், ஆக. 3: தஞ்சாவூரில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றதாக மூன்று பேரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் பாதுகாப்புப் பிரிவு போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸôரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் கீழவாசல் தாசபபன்நாயக்கன் தெருவிலுள்ள ஒரு வீட்டின் முன்புள்ள கீற்றுக்கொட்டகையில் சோதனையிட்டனர்.

அப்போது கத்தியைக் காட்டி மிரட்டிய கீழவாசல் ஒட்டக்காரத் தெருவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (43), மராட்டிய தெருவைச் சேர்ந்த வன்னிராஜ் (41), தாசப்பன்நாயக்கன் தெருவைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி (41) ஆகிய மூவரையும் போலீஸôர் கைது செய்தனர்.

அந்த வீட்டிலிருந்து 15 சாக்குகளில் 750 கிலோ அரிசியும், ஐந்து சணல் சாக்குகளில் 25 கிலோ அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டக்காரத் தெருவிலுள்ள மற்றொரு வீட்டிலிருந்து 60 வெள்ளை சாக்குகளில் இருந்து 3,000 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைதான மூவரும் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முருகன் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...