Friday, August 19, 2011

குவைத்தில் புனித ரமலான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள்


Kuwait city - Kuwait, Al Kuwait
குவைத்: குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் மக்களுக்கு ஏற்பாடு செய்யும் புனித ரமலான் (1432 / 2011) மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றது.

அதன் விவரம் வருமாறு,

நாள்: 20.08.2011 வெள்ளிக்கிழமை நள்ளிரவு / சனிக்கிழமை அதிகாலை (ரமலான் பிறை 20) முதல் 30.08.2011 (ரமலான் மாத கடைசி) வரை

நேரம்: தினந்தோறும் நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை

இடம்:

அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல்,


K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,

ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில்,

ஏர்போர்ட் (எண் 55) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,

ஃகைத்தான், குவைத்.

நிகழ்ச்சிகள்:

கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை

குர்ஆன் ஹல்கா

திக்ரு மஜ்லிஸ்

துஆ மன்றம்

திருக்குர்ஆனை முறையாக ஓத தஜ்வீத் பயிற்சி

பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பாழிவுகள்

குறிப்பு:

நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்டும். பெண்களுக்கு தனியிட வசதி உண்டு. முன்பதிவு செய்தவர்களுக்கு ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படும். ஸஹர் உணவு தேவையுடையோர் தினந்தோறும் மாலை 5:00 மணிக்கு முன்பு (+965) 99694208 என்ற அலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகள் குறித்து குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் தெரிவிக்குமாறு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

பகல் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து நோன்பிருப்போம்!

இரவு முழுவதும் இறைவனை வணங்கிக் கொண்டிருப்போம்!!

லைலத்துல் கத்ரை தேடி அல்லாஹ்விடம் தவமிருப்போம்!

இறுதிப் பத்தில் இறையருளை இணைந்தே இறைஞ்சுவோம்!!

மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82

மின்னஞ்சல் முகவரிகள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group

இணையதளம்: www.k-tic.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...