Tuesday, August 9, 2011

ரூ.19 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!

அண்மைக்காலமாக தொடர் உயர்வைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவாக ரூ.19 ஆயிரத்தை நெருங்குகிறது. பவுனுக்கு ரூ.440 அதிகரிப்பு 

தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் உள்ளது. ரூ.17 ஆயிரத்தில் இருந்து வந்த ஒரு பவுன் தங்கத்தின் விலை கடந்த 3ஆம் தேதி ரூ.18 ஆயிரத்தை தொட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வாக கருதப்பட்டது. அதன் பின்னரும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.18,416 ஆக இருந்தது. நேற்று விடுமுறை என்பதால் அதே விலை நீடித்தது. 

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.440 உயர்ந்து உள்ளது. இன்று காலை ஒரு கிராம் விலை ரூ.2357-க்கும், ஒரு பவுன் (8 கிராம்) ரூ.18,856-க்கும் விற்கப்பட்டது. 
சேலத்தில் இன்று காலை தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை தாண்டியது. பிற்பகல் 18 ஆயிரத்து 856 ஆக குறைந்தது. தங்கம் விலை இப்படி “கிடு கிடு” என்று உயர்ந்து இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

உலக பங்குசந்தையின் சரிவு, அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்றவை காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. எனவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...