Saturday, May 14, 2011

மரண செய்திகள்

அஸ்ஸாலமு அலைக்கும்(வரஹ்)
14/05/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) வடக்குத் தெருவை சேர்ந்த பெரிய ஹிஜ்ரத் ”மர்ஹிம்”கவூஸ் ஆலிம் அவர்களின் மகளும்,  ”மர்ஹிம்”  K.A.சுபகான் அவர்களின் மனைவியும்மான  கமருன்னிசா அவர்கள் இன்று காலை 8 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜணாஜா இன்று மாலை 05 :30 மணியளவில் நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி(வலிமா)


அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லா

எங்களின் ஆருயிர் நண்பன் 

S.அஹமது முஹையதீன் வெட்ஸ் A.அல்மாஸ் சுல்தானா 

அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி(வலிமா)இன்ஷா அல்லா நாளை (15-05-2011)முஹம்மது பந்தர் மதரஸா மன்பவுல் ஹீதாவில் நடைப்பெற உள்ளதால் தாங்கள் அனைவரும் வருகைப்புரிந்து மணமக்களை வாழ்த்தி எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்வோம்.

வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
R.சலாவுதீன் A.பரக்கத் அலி J.கியாசுதீன் S.சாகுல் ஹமீது
மற்றும்
முஹம்மது பந்தர் நண்பர்கள்

Friday, May 13, 2011

தி.மு.க.,வின் கோட்டை தஞ்சை மாவட்டத்தில் விழுந்ததா ஓட்டை?


கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் இருந்த, 10 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., ஐந்து இடங்களிலும், தி.மு.க., கூட்டணி ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போது, தொகுதி மறுசீரமைப்பில், எட்டு தொகுதிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக, தஞ்சை மாவட்ட நிலவரம்: தஞ்சாவூர்: தி.மு.க., சார்பில், வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லாவும், அ.தி.மு.க., சார்பில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலர் வக்கீல் ரெங்கசாமியும் மோதினர்.

தொடர்ந்து 17 ஆண்டுகள், எம்.எல்.ஏ.,வாகவும், இதில் ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்தும் உபயதுல்லா எந்த ஒரு வளர்ச்சி பணியையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், தி.மு.க.,வின் கோஷ்டி பூசல், வேட்பாளர் மீதான அதிருப்தி, தொகுதி மறுசீரமைப்பால் மாறிய பகுதிகள் தங்களை கரை சேர்க்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர்.இன் நிலையில் தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட தஞ்சையில், அ.தி.மு.க., 20 ஆண்டுகளுக்கு பிறகு தொகுதியை கைப்பற்றியது.


அ.தி.மு.க வேட்பாளர் எம்.ரெங்கசாமி 75,415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருவையாறு: அதிமுக வேட்பாளர் எம்.ரெத்தினசாமி வெற்றி


மே 13:  திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.ரெத்தினசாமி 13 ஆயிரத்து 248 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பூதலூர் ஒன்றியச் செயலர் கூத்தூர் எம். ரத்தினசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை கொண்டாடும் வகையில் அதிமுக பிரமுகர்கள் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். வெற்றி குறித்து ரத்தினசாமி கூறியது:


அதிமுக தொண்டர்கள், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி பகுதியின் பொறுப்பாளர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் திருவையாறு தொகுதியின் அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக சாலை, மின்சாரம், குடிநீர், மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள் நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!


Vadivelu
சென்னை: திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் வடிவேலு என்றால் அது நிச்சயம் மிகையாகாது. அந்த அளவுக்கு வடிவேலுவின் வாய்தான் திமுகவுக்கு இயல்பாக வந்திருக்கக் கூடிய ஓட்டுக்களையம், அதிமுக, தேமுதிக பக்கம் திருப்பி விட்டிருப்பதாக கூறப்படுகிறது.


திமுகவின் அரசியல் வரலாறு மிகப் பெரியது. எத்தனையோ பெரும் தலைவர்களைக் கண்ட இயக்கம் அது. அன்பழகன் என்ற நாவுக்கரசர் நடமாடும் கட்சி இது. அதேபோல நெடுஞ்செழியன் என்ற மாபெரும் பேச்சாளரைக் கண்ட இயக்கம் இது. மண்ணை நாராயணசாமி, கே.ஏ.மதியகழன் என்று பல பேச்சுப் பொறியாளர்களைக் கொண்ட இயக்கம் இது.

பல மாவட்டங்களில் திமுக கூட்டணி 'வாஷ்-ஆவுட்'!


நெல்லை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பல மாவட்டங்களில் 'வாஷ்-அவுட்' ஆகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த முறை 10 தொகுதிகளில் எட்டு தொகுதிகளைத் தக்க வைத்த கூட்டணி இம்முறை 1 தொகுதியிலும், தூத்துக்குடி 1 தொகுதியிலும், குமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 தொகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும், புதுக்கோட்டையில் ஜீரோவையும், சிவகங்கை மாவட்டத்தில் ஜூரோவையும், திருவாரூரில் 2 தொகுதிகளிலும், திருச்சியில் 1 தொகுதியிலும், நாகையில் ஜூரோவையும், பெரம்பலூரில் 1 தொகுதியிலும், கரூரி்ல் 1 தொகுதியையும், திண்டுக்கல்லில் 2 தொகுதியையும், நீலகிரியில் 2 தொகுதிகளையும்,

துபாய்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து தமிழக வாலிபர் தற்கொலை


Dubai Burj Kalifa Building
துபாய்: துபாயில் உலகின் உயரமான கட்டடத்திலிருந்து குதித்து சிவகங்கையைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. 2,716 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் மொத்தம் 160 மாடிகளைக் கொண்டது. இதில் 45 மற்றும் 108 மாடிகளில் வீடுகளும், மற்ற 158 மாடிகளிலும் கார்ப்ரேட் நிறுவன அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. 
இதில் அராப் டெக் என்ற கட்டுமான நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதியமான் கண்ணன் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவன அலுவலகம் 120வது மாடியில் உள்ளது.

எந்தத் துறையை எடுக்கலாம் எஞ்சினியரிங்?(வீடியோ)



அன்பு நண்பர்களே..,
இந்த பதிவு TYPE OF ENGINEERING COURCES( BE - Bacholer of Engineering) என்பதை பார்போம்.
எஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது.

திமுக தோல்வியடைய என்ன காரணம்?

அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.
திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.
திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்:
1. மின்வெட்டு
தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Wednesday, May 11, 2011

இலவச விடுதி வசதியுடன் பிளஸ்-1, பிளஸ்-2 கல்வி

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: 

Related Posts Plugin for WordPress, Blogger...