Friday, May 13, 2011

பல மாவட்டங்களில் திமுக கூட்டணி 'வாஷ்-ஆவுட்'!


நெல்லை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பல மாவட்டங்களில் 'வாஷ்-அவுட்' ஆகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த முறை 10 தொகுதிகளில் எட்டு தொகுதிகளைத் தக்க வைத்த கூட்டணி இம்முறை 1 தொகுதியிலும், தூத்துக்குடி 1 தொகுதியிலும், குமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 தொகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும், புதுக்கோட்டையில் ஜீரோவையும், சிவகங்கை மாவட்டத்தில் ஜூரோவையும், திருவாரூரில் 2 தொகுதிகளிலும், திருச்சியில் 1 தொகுதியிலும், நாகையில் ஜூரோவையும், பெரம்பலூரில் 1 தொகுதியிலும், கரூரி்ல் 1 தொகுதியையும், திண்டுக்கல்லில் 2 தொகுதியையும், நீலகிரியில் 2 தொகுதிகளையும்,


மதுரையில் ஜூரோவையும், தேனியில் 1 தொகுதியும், நாமக்கல், தர்மபுரி, சேலம், கடலூர், கோவை, திருப்பூர், ஈரோடில் ஜூரோவையும், அரியலூரில் 1 தொகுதியும் கிருஷ்ணகிரியில் 2 தொகுதிகளையும், விழுப்புரத்தில் 1 தொகுதியையும் வேலூரில் 2 தொகுதிகளையும், திருவண்ணாமலையில் 1 தொகுதியையும், சென்னையில் 2 தொகுதிகளையும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூரோவையும், பெற்று தமிழகத்தில் வெறும் 22 இடங்களில் திமுகவும், 5 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 3 இடங்களில் பாமகவும் பெற்று மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

திமுக கூட்டணியின் தோல்விக்கு உண்டான காரணங்களை அலசி ஆராயும் பணியில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர். பல மாவட்டங்களில் திமுக தோல்விக்கு போதிய ஒத்துழைப்பு கூட்டணியினர் வழங்கவில்லை என்பதும், திமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல்கள்தான் முதல் காரணம் என்றும் தெரிய வந்துள்ளதாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...