Friday, May 13, 2011

துபாய்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து தமிழக வாலிபர் தற்கொலை


Dubai Burj Kalifa Building
துபாய்: துபாயில் உலகின் உயரமான கட்டடத்திலிருந்து குதித்து சிவகங்கையைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. 2,716 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் மொத்தம் 160 மாடிகளைக் கொண்டது. இதில் 45 மற்றும் 108 மாடிகளில் வீடுகளும், மற்ற 158 மாடிகளிலும் கார்ப்ரேட் நிறுவன அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. 
இதில் அராப் டெக் என்ற கட்டுமான நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதியமான் கண்ணன் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவன அலுவலகம் 120வது மாடியில் உள்ளது.
அதியமான் தன் சொந்த ஊருக்கு வர விடுமுறை கேட்டார். ஆனால் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் விரகத்தி அடைந்த அவர் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு 147வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவரது உடல், சிதறியது. 39 மாடிகள் வரை சுவரில் மோதியவாரே வந்த அவரது உடல் 108வது மாடியின் பால்கனியில் வந்து விழுந்தது. போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முழு விசாரணையும் முடிந்த பிறகே அவரது உடலை இந்திய தூதரகம் மூலம் அராப் டெக் நிறுவனம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உலகின் உயரமான கட்டிடத்தில் நடந்துள்ள முதல் தற்கொலை சம்பவம் இதுவாகும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...