Friday, May 13, 2011

தி.மு.க.,வின் கோட்டை தஞ்சை மாவட்டத்தில் விழுந்ததா ஓட்டை?


கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் இருந்த, 10 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., ஐந்து இடங்களிலும், தி.மு.க., கூட்டணி ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போது, தொகுதி மறுசீரமைப்பில், எட்டு தொகுதிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக, தஞ்சை மாவட்ட நிலவரம்: தஞ்சாவூர்: தி.மு.க., சார்பில், வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லாவும், அ.தி.மு.க., சார்பில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலர் வக்கீல் ரெங்கசாமியும் மோதினர்.

தொடர்ந்து 17 ஆண்டுகள், எம்.எல்.ஏ.,வாகவும், இதில் ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்தும் உபயதுல்லா எந்த ஒரு வளர்ச்சி பணியையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், தி.மு.க.,வின் கோஷ்டி பூசல், வேட்பாளர் மீதான அதிருப்தி, தொகுதி மறுசீரமைப்பால் மாறிய பகுதிகள் தங்களை கரை சேர்க்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர்.இன் நிலையில் தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட தஞ்சையில், அ.தி.மு.க., 20 ஆண்டுகளுக்கு பிறகு தொகுதியை கைப்பற்றியது.


அ.தி.மு.க வேட்பாளர் எம்.ரெங்கசாமி 75,415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2 comments:

  1. 17 ஆண்டு காலமாக பதவியில் இருந்த இவர் தஞ்சையில் ஒரு வளர்ச்சி பணியும் செய்யவில்லை. இது தான் அவர் தோல்விக்கு காரணம். இனி அவர் தஞ்சையில் மட்டுமல்ல வேறு எங்கு நின்றாலும் வெற்றி பெற முடியாது. இனி ரெங்கசாமியும் தஞ்சையை மறந்தாரேயானால் அவருக்கும் இதே நிலைதான்.

    ReplyDelete
  2. 17 ஆண்டு காலமாக பதவியில் இருந்த இவர் தஞ்சையில் ஒரு வளர்ச்சி பணியும் செய்யவில்லை. இது தான் அவர் தோல்விக்கு காரணம். இனி அவர் தஞ்சையில் மட்டுமல்ல வேறு எங்கு நின்றாலும் வெற்றி பெற முடியாது. இனி ரெங்கசாமியும் தஞ்சையை மறந்தாரேயானால் அவருக்கும் இதே நிலைதான். Nizam from UAE

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...