Thursday, March 1, 2012

துபாய்: பால்கனியில் துணி உலரப்போட்டால் அபராதம்!

 

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய மாகாணங்களில் குடியிருக்கும் கட்டிட பால்கனியில் துவைத்த துணிகளைக் காய வைப்பதும், டிஷ் ஆண்டெனாவை பொருத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் துபாயின் சில பகுதிகளில் வரும் மார்ச்-1,2012 முதல் பால்கனியில் துணிகள், டிஷ் ஆண்டெனா மற்றும் பார்பிக்யூ அடுப்பு ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRAKHEES எனப்படும் அரசாங்க துணை அமைப்பு கடந்த ஆறுமாதங்களாக இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருவதாகவும் இம்மாதம் பிப்ரவரி 29 ஆம் தேதியோடு அந்த பிரச்சாரம் நிறைவடைகின்றது என்றும் தெரிவித்துள்ளது.


பால்கனியில் துவைத்த துணிகளைக் காயவைப்பதும்,சீதோசனப் பயன்பாடு தவிர்த்த ஏனைய தளவாடங்களை வைத்திருந்தால் 500 திர்ஹம்ஸ் (சுமார் 6,500 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு துபாயில் இந்தக் கட்டுப்பாடு பாம் ஜுமைரா, ஜுமைரா லேக் டவர்ஸ், இண்டர்நேசனல் சிடி, டிஸ்கரி கார்டன் ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

தமிழர்களும் ஆசிய நாட்டவர்களும் பெருமளவில் தங்கியிருக்கும் டேரா துபாய், பார் துபாய் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியான சோனாப்பூர் ஆகிய இடங்களில் பெரும்பாலான கட்டிடங்களில் துணிகளைக் காயவைக்கவும்,டிஷ் ஆண்டெனா பொருத்தவும் வீட்டின் பால்கனிகளே உபயோகிக்கப்படுகின்றன என்றாலும் மேற்கண்ட அறிவிப்பில் இப்பகுதிகள் குறிப்பிடப்படவில்லை என்பது ஆறுதலான செய்தி.

எனினும், துபாய் முனிசிபாலிடியின் கெடுபிடி மற்றும் அபராத விதிப்பிலிருந்து தப்பிக்க இவ்விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Read more about துபாய்: பால்கனியில் துணி உலரப்போட்டால் அபராதம்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...