Friday, January 6, 2012

இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள
மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...

தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....

அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...
ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்...

Thursday, January 5, 2012

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்


டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப் புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி, வடை சாப்பிடுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். சில பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும், சிலர் புகை பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

டீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள் ரீயூஸ் என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார் செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம். ரீபைண்ட் ஆயில்களினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்பே எழுதி இருந்தேன்.

பெரும்பாலான டீக்கடைகளில் பாலை சுட வைப்பதே இல்லை. வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்திய எண்ணெயுடன், புதிய எண்ணெயை சேர்த்துத்தான் தயார் செய்கின்றார்கள். அதுமட்டுமல்ல சுவீட் கடைகளிலும் கூட இதே வேலையைத்தான் செய்கின்றார்கள்.

யார் யாரெல்லாம் தினம் தோறும் டீக்கடையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய நோய்வயிற்றுப் புற்று நோய். நோய் வேண்டுமா இல்லையா என்பதை சாப்பிடுபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை

மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும்அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSSமற்றும் இந்து முன்ணனி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மனம்புரியும் ஆணுக்கு1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளார். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது..


இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும்
, மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இரன்டு மாதங்களுக்குள் இராமநாதபுரம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமனம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணைபோகின்றது.

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும் , நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும்,நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.

Saturday, December 17, 2011

மரணத்தை நினைவு கூறுவோம்

'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) திர்மிதி 2229)

எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு திரில்லிங்கான விஷயம் மரண நேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம்.

உலகில் மனிதன் தான் விதைத்து வந்ததின் பலாபலன்களின் தராதரத்தை உணர்தும் ஆரம்பக் காட்சிகளின் அரங்கேற்றமே மரண நேரம்.

Tuesday, December 13, 2011

தஹஜ்ஜத் தொழுகை

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1145, 6321, 7494
 
 Source from-http://www.maria-yoana.com

Friday, December 9, 2011

மரண அறிவிப்பு

மேலத்திருப்பந்துருத்தி அலி தெரு மர்ஹூம் வல்லம் பாவாஜி ராவுத்தர் அவர்களின் துனைவியாரும் மேலமதரஸா ஹஜ்ரத் ஹபீப் ரஹ்மான் அவர்களின் தாயாரும் ஆகிய தவக்கல்பீவி அவர்கள் இன்று [09/12/2011] இரவு 9 மணியவில் தாருல் பகாவை விட்டு தாருல் பணாவை அடைந்துவிட்டார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிரோம்.

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.  

Wednesday, December 7, 2011

குவைத்தில் பாராளுமன்ற தேர்தல்.


குவைத்தில், எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலகினர். பிரதமர் ஷேக் நசீர் அல் முஹம்மத் அல் - சபாஹ் மீது ஊழல் புகார் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர். குவைத்தில் பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியதை அடுத்து, தற்போது நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் மற்றும் அமைச்சரவை ராஜினாமாவை, குவைத் அரசர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல் - அஹ்மத், பொதுத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் தேர்தல் தேதியை அவர் குறிப்பிடவில்லை. எனினும் குவைத் அரசியல் சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எண்ணெய் வளமிக்க குவைத் நாட்டின் பிரதமரான ஷேக் நசீர் அல் முஹம்மத் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவர் பதவி விலகினார். இதனால் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலை நடத்தவுள்ளதாக குவைத் மன்னர் விளக்கமளித்ததுள்ளார்.
yarlmuslim

Tuesday, December 6, 2011

எச்சரிக்கை!


( NOTE BOOK ) மடிக்கணனிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.இவ்வாறு மடியில் வைத்து மடிக் கணனிகளைப் பாவிப்பதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இக் கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

வை-பை இல்லாமல் மடிக்கணனியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் வை-பையை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர மடிக்கணனிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Monday, December 5, 2011

ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன?


அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? (திருக் குர்ஆன் 2:114)

அன்புச் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

நீங்கள் ஒரு தனி நபராகவோ ஒரு மக்கள் குழுவினராகவோ இருக்கலாம். மனித சமுதாயத்திற்கு சிந்தனைச் சுதந்திரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, அதனைப் பலதெய்வக்கொள்கையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், மஸ்ஜிதுகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்டு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப்பின் பாபரி மஸ்ஜித் 1992ம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி ஹிந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டது. ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செய்வதற்கு நீங்களும் பல்வேறு வழிகளில் பணியாற்றலாம்!

டிசம்பர் 10 ல் சந்திர கிரகணம்!

சந்திர கிரகணம் டிசம்பர் 10 ஆம் தேதி அன்று ஏற்படுகிறது.இது இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சந்திர கிரகணம் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்டதைப் போல சுமர் 5 மணி நேரம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...