Saturday, June 18, 2011

மரண செய்திகள்

17/6/2011 நாகூர் ஆண்டவர் அவர்களின் பேரனும்,அப்துல்லா அவர்களின் மகனுமாகிய அப்துல் ரஹ்மான் நேற்று மாலை 6:00 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜணாஜா நமதூரில் இன்று 2:00 மணியளவில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்

கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 

Friday, June 17, 2011

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)


இன்ஷா அல்லா
இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 19-06-2011


U.முஹம்மது இத்ரீஸ் = A.ரொஹைனி
இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk,ஜமாத்தார்கள் மற்றும்உறவினர்களும்பொது மக்களும்

Thursday, June 16, 2011

சந்திரகிரகண சிறப்பு தொழுகை

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் -முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம்- ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹதிமா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுக்களும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரகணம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ வாழ்விற்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும்போது விரைந்து தொழுங்கள்' என்று கூறினார்கள்.நான் உர்வாவிடம் உங்கள் சகோதரர் மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது ஸுப்ஹுத் தொழுகை போல் இரண்டு ரக்அத் தொழுததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லயே என்று கேட்டேன. அதற்கு அவர், ஆம்! அவர் நபி வழிக்கு மாற்றம் செய்துவிட்டார்' என்று விடையளித்தார் என கஸீர் இப்னு அப்பாஸ் குறிப்பிட்டார். 
ஸஹீஹ் புகாரி-1046.

நாமக்கல் மோகனூர் அருகே விபத்து : முஹம்மது பந்தர் ஓட்டுனர் சேட் உள்பட 11 பேர் பலி

Wednesday, June 15, 2011

மரண செய்திகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
15/06/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) ஹத்திஜா நகர் சேர்ந்த கஞ்சா அலி உள்ள பேரனும்,அப்துல் ரஹூம் அவர்களின் மகன்
சேட் (என்கிற) முஹம்மது இப்ராஹூம் அவர்கள் நேற்று மாலை 6.00.pm மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜணாஜா நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

நடந்த சம்பவம்



Monday, June 13, 2011

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)


இன்ஷா அல்லா

இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 16-06-2011

A.ரபீக் (எ) பீர்முகமது = J.நஸ்ரின் பானு
இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும்பொது மக்களும்



திருமண நிகழ்ச்சிகள்


அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)


இன்ஷா அல்லா



இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 15-06-2011

H.முகமது ஹசன்,T.பெனாசீர் பேகம்

இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொது மக்களும்

இஸ்லாம்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:
1) பெற்றோரை நிந்திப்பவன்
2) மதுவில் மூழ்கியிருப்பவன்
3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன்.
ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்

‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}

Sunday, June 12, 2011

இறைநம்பிக்கை

ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி-9

'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி-14
Related Posts Plugin for WordPress, Blogger...