Friday, June 10, 2011

டீசல் விலையை உயர்த்த மந்திரி ஜெய்பால் முயற்சி

11 Jun 2011 12:02,
புதுடில்லி:பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள்தோறும் ஏற்பட்டு வரும் 450 கோடி ரூபாய் இழப்பை சரிக்கட்ட, டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி வலியுறுத்தினார்.மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, நேற்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது, அதிகாரமிக்க அமைச்சர் குழுக் கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து விவாதித்தார்.இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய ஜெய்பால் ரெட்டி கூறியதாவது: டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை அடக்க விலைக்கு கீழாக விற்பதன் மூலம், பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு இழப்பு ஏற்படும் பணத்தை எப்படி ஈடுகட்டுவது, இதை சரிக்கட்ட, பொதுத் துறை நிறுவனங்களுக்கு என்ன சலுகை வழங்குவது என்பது குறித்து, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு தான் முடிவு செய்யும். இதை எப்போது கூட்டுவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக விவாதிக்கப்பட்டது.இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறினார்.மத்திய பெட்ரோலிய அமைச்சகம் டீசல் விலையை லிட்டருக்கு 3 முதல் 4 ரூபாய் வரையும், சிலிண்டர் விலையை 20 முதல் 25 ரூபாய் வரையும் உயர்த்த வேண்டும் என கோரி வருகிறது. மண்ணெண்ணெய் விலையையும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கையாகும்.

அபுதாபி- ரெஸ்டாரென்ட் மானேஜர் தேவை

அபுதாபியில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டுக்கு மேலாளர் தேவைப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி rahim699@gmail.com

ஹோட்டல் மேனேஜ்மெண்டில் பட்டம் பெற்று இரண்டு அல்லது மூன்று வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

சவுதி அரேபியா - லிப்ட் டெக்னீசியன் தேவை

சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் பிரபல நிறுவனத்திற்கு எலிவேட்டர் டெக்னீசியன் தேவை.

மேலதிக தொடர்புக்கு: 0096654 1838218.

மாற்றத்தகுந்த இகாமா வைத்திருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 6, 2011

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006 தொலைபேசி: 2829 5445 

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை – 14 தொலைபேசி: 94440 52530 

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை – 06 

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை – 06 

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) 

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34 

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34

Sunday, June 5, 2011

மது அருந்துவதால் ஏற்படும் தண்டனை

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான்.மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

புனித ஹஜ் பயணம்

நடப்பு ஆண்டில் தமிழகத்திலிருந்து, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு 3,049 பேர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை இராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை, 2011-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்லும் பயணிகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த சுமார் 1,500 ஹஜ் பயணிகள் கலந்து கொண்டனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைச் செயலாளர் சந்தானம், தமிழக ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன், குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அஸ்ஸாலமு அலைக்கும்(வரஹ்)

AL DAWA MEDICAL SERVICES CO.RIYADH என்ற நிறுவனத்திற்கு 8 டிரைவர்கள் தேவை. தொடர்பு கொள்ள வேண்டிய நபர்
MR. GHULAM MOHAMMED KHAN
Sales Manager

Landline # 01-4389009
Mobile # 0508527433

Saturday, June 4, 2011

மரண செய்திகள்

அஸ்ஸாலமு அலைக்கும்(வரஹ்)

04/06/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) குலிஸ்தான் தெருவை சேர்ந்த ”மர்ஹிம்”டீக்கடை அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும்,A.அன்வர் பாட்ஷா ஜிமேரா ஜாகிர் உசேன் அவர்களின் தயாறுமான ஹாஜியா ஏசான் பீவி அம்மாஅவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜணாஜா நாளை காலை 10 மணியளவில் நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday, June 2, 2011

சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மருந்தளிக்கும் பள்ளிவாசல்!

சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில், பள்ளிவாசல் ஒன்றில், சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்து வருகின்றனர். ஆண்டுக் கணக்கில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும், அவர்கள் அளிக்கும் மூலிகை மருந்து மூலம், நோயிலிருந்து எளிதில் விடுபடுவதாகக் கூறப்படுகிறது.

சத்திஸ்கருக்குச் சிகிச்சைக்கு செல்பவர்களில், 50 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாகவும் தெரிகிறது.

இதுபற்றி நாமக்கல் வழிகாட்டி நலச்சங்கத் தலைவர் சிவகுமார் நிருபர்களிடம் கூறுகையில்:

"சர்க்கரை நோய்க்கு, சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மருந்து கொடுக்கின்றனர். அந்த மருந்தை, ஒட்டகப் பாலுடன் கலந்து தருகின்றனர்.
நாள்தோறும், காலை 6.30 மணி முதல், 11 மணி வரை சிகிச்சை அளிக்கின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், ஒரு முறை மருந்து சாப்பிடுவதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மருந்தை, அங்கேயே தங்கி சாப்பிட்டு திரும்ப வேண்டும். இதற்காக, குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதியிலிருந்தும் அங்கு வருகின்றனர். ஆண்டு முழுவதும், சர்க்கரை நோய்க்கு மருந்து வழங்குகின்றனர். நூற்றுக்கு, 70 சதவீதம் பேர், அங்கு மருந்து சாப்பிட்டதன் மூலம், நோய் கட்டுப்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கின்றனர்."

Wednesday, June 1, 2011

Related Posts Plugin for WordPress, Blogger...