Friday, June 10, 2011

டீசல் விலையை உயர்த்த மந்திரி ஜெய்பால் முயற்சி

11 Jun 2011 12:02,
புதுடில்லி:பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள்தோறும் ஏற்பட்டு வரும் 450 கோடி ரூபாய் இழப்பை சரிக்கட்ட, டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி வலியுறுத்தினார்.மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, நேற்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது, அதிகாரமிக்க அமைச்சர் குழுக் கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து விவாதித்தார்.இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய ஜெய்பால் ரெட்டி கூறியதாவது: டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை அடக்க விலைக்கு கீழாக விற்பதன் மூலம், பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு இழப்பு ஏற்படும் பணத்தை எப்படி ஈடுகட்டுவது, இதை சரிக்கட்ட, பொதுத் துறை நிறுவனங்களுக்கு என்ன சலுகை வழங்குவது என்பது குறித்து, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு தான் முடிவு செய்யும். இதை எப்போது கூட்டுவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக விவாதிக்கப்பட்டது.இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறினார்.மத்திய பெட்ரோலிய அமைச்சகம் டீசல் விலையை லிட்டருக்கு 3 முதல் 4 ரூபாய் வரையும், சிலிண்டர் விலையை 20 முதல் 25 ரூபாய் வரையும் உயர்த்த வேண்டும் என கோரி வருகிறது. மண்ணெண்ணெய் விலையையும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...