Sunday, September 11, 2011

கல்விக்கடன் தர வங்கிகள் மறுப்பு: அரசு உதவி பெற்று லண்டன் செல்லும் மதுரை மாணவர்


மதுரை தியாகராஜர் கல்லூரி பி.எஸ்சி., பயோடெக்னாலஜியில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வங்கிகளை அணுகிய போது, அதிகத் தொகை தர மறுத்ததுடன், சொத்துப் பிணையம் கேட்கப்பட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தவித்து வந்தார். இந்நிலையில் சமூக நீதித்துறை அமைச்சகம் சார்பில், டில்லியில் நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்று, கல்வி உதவித்தொகையுடன் வெளிநாடு செல்கிறார். ஆயிரம் பேர் பங்கேற்றதில் இரண்டு பேர் தேர்வாகினர்.


அதில் ஒருவரான இளமாறன் கூறியதாவது: கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போதே 22 கருத்தரங்குகளில் பங்கேற்றேன். நிறைய ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். அப்பா காய்கறி வியாபாரி, அம்மா கூலித்தொழிலாளி. எங்கள் குடும்பத்தில் நான், முதல் பட்டதாரி. மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வதற்கு வங்கிகள் கடன் தர தயங்கின. இந்தநேரத்தில் தான் வெளிநாட்டு படிப்புக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை அளிப்பது தெரியவந்தது. கருத்தரங்குகளில் பங்கேற்றது, ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தது ஆகிய காரணங்களால் என்னை தேர்வு செய்தனர். லண்டன் பெட்போர்ஷையர் பல்கலையில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கச் செல்கிறேன். விசா எடுத்து கொடுப்பது முதல், தங்குமிடம், உணவு, கல்விக் கட்டணம் அனைத்திற்கும், ரூ.41 லட்சம் செலவாகும். அதை மத்திய அரசே வழங்குகிறது. செப்.,19ல் லண்டன் செல்கிறேன். எனக்காக செலவு செய்த அரசுக்கு நான் செய்யும் நன்றிக்கடன், படித்து முடித்தபின், இந்தியாவிலேயே சேவை செய்வது தான், என்றார். இது அறிவியலுக்கு கிடைத்த பெருமை. மதுரை மாணவருக்கு கிடைத்த பெருமை தானே.__________________________________________
Gateway of Thopputhurai-- www.thopputhurai.com
Related Posts Plugin for WordPress, Blogger...