Tuesday, June 28, 2011

மூன்றே மாதங்களில் மீண்டும் உயிர்தெழுந்த ஜப்பான்



கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானை புரட்டிப் போட்டது சுனாமி. நூறாண்டுகளில் இல்லாத பாதிப்பாக இது அமைந்தது. காணாமல் போனவர்களையும் கணக்கில் சேர்த்தால் 23 ஆயிரம் பேர் பலி. 1.25 லட்சம் கட்டிடங்கள் நாசம். ரூ.13.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு. அதிகபட்சமாக 128 அடி உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து ஊருக்குள் 10 கி.மீ. தூரம் வரை பாய்ந்தது.
இதனால் ஏற்பட்ட குப்பை 2.5 கோடி டன் பசிபிக் பெருங்கடலில் 10 ஆண்டுகளுக்கு சுற்றிக் கொண்டிருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.ஆனால் நடந்த சோகத்தை உடனே மறந்துவிட்டு விறுவிறுவென மீட்பு பணிகளில் கவனம் செலுத்தினர் ஜப்பானியர்கள். சுனாமி தாக்குதல் நடந்து 3 மாதத்துக்குள் சுனாமி சுவடு தெரியாமல் நகரங்களை சீரமைத்துவிட்டார்கள். எதையும் சமாளிப்போம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் ஜப்பானியர்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...