Tuesday, June 28, 2011

இன்று ஒரு அரிய தகவல் : குழந்தைகள் பிறந்தவுடன் அழுவ

உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த அரிய குட்டித் தகவல்கள் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நாம் மணிக்கணக்கில் வாசிக்கும் அல்லது கேட்கும் தகவல்களை விட ஓரிரு வரிகளிலோ அல்லது ஒரு சில நிமிடங்களிலோ, எங்கேனும் யதார்த்தமாக வாசிக்கவோ அல்லது கேட்கவோ நேரிடும் குட்டித் தகவல்கள் மிகவும் ரசிக்கும் வகையிலும், வியப்பூட்டும் வகையிலும் அமைவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதுபோலத்தான் இன்றையத் தகவலும் உங்களை ரசிக்க வைக்கும் என்பது திண்ணம். இந்த தகவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு
குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே இப்பொழுது குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கான காரணத்தை இந்தத் தகவலின் வாயிலாக அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். (கிளாசிக்- சிக்கந்தர்-ரியாத்)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...