
ஜெர்மனி: வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இ-கோலி பாக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் ஜெர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளன. மேலும் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலர் இப்பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்துள்னர். இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. இதேவேளை ஜெர்மனியின் ஹம்பேர்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கர்கள் இருவருக்கும் இ-கோலி தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவீடனிலும் இத்தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment