Sunday, June 19, 2011

வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா ? கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசின் இணையதளம்

புது தில்லி : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அடிக்கடி பலர் கடனுக்கும் வட்டிக்கும் பணம் வாங்கி இலட்சக்கணக்கில் ஏமாறுவதை செய்திதாள்களில் அடிக்கடி காண்கிறோம். இனி அப்படி ஏமாறாமல் இருக்க இதோ ஒரு இணையதளம். வெளிநாட்டில் வேலை தரும் அந்நிறுவனம் உண்மையா என்பதை இவ்விணையத்தில் சென்று பார்க்கலாம்.

மத்திய அரசின் இணையமான அத்தளம் http://www.poeonline.gov.in/ ஆகும். இத்தளத்தில் அந்நிறுவனம் உண்மையா என்பதை 3 விதங்களில் கண்டறியலாம். ஏனென்றால் பிரபல நாளிதழ்களை திறந்து பார்த்தால் ஏகப்பட்ட போலி ஏஜெண்டுகள் பெயரில் விளம்பரங்கள் வருவதை பார்க்கலாம்.

எனவே இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கு RA Information ஐ கிளிக் செய்தால் அதில் வரும் துணை மெனுவில் நிறுவனம் அல்லது ஏஜெண்டின் பெயரை கொண்டோ அல்லது அதன் பதிவு எண்ணான RC நம்பரை கொண்டோ அல்லது அதன் தொலைபேசியை கொண்டோ கிளிக் செய்தால் அந்நிறுவனத்தை பற்றிய விபரத்தை தருகிறது. அது நம்பகமானது, ரத்து செய்யப்பட்டதா, மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது அனுமதி காலாவதியானதா என்று விபரம் தருகிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...