
நெல்லை: விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 13 தினங்களே உள்ள நிலையில் மெட்ரிக் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றன.
கோடை காலம் முடிந்தவுடன் நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை களை கட்டும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பிரபலமான பள்ளிகளில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தங்களி்ன் வருமானத்தை பெருக்கிக்கொள்ள இப்போதே வசூலில் இறங்கிவிட்டன.
புதிதாக ஒரு மாணவரை பள்ளியில் சேர்க்க குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரமாவது வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் நச்சரிக்கின்றன. அவர்களுக்கு கல்வி கட்டணம், புத்தக கட்டணம், சுற்று கட்டணம் என அடுத்தடுத்து பல அதிர்ச்சிக்ள் காத்திருக்கின்றன. ஏற்கனவே பளளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், இவ்வாண்டு சில புதிய விதிமுறைகளை பிறபிக்கத் துவங்கியுள்ளன. பாளையி்ல் ஒரு பள்ளியில் கடந்த வாரத்துக்கு முன்பு பெறறோர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி புத்தக கட்டணமாக ரூ.2000 முதல் 5000 வரை செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. நேற்று இறுதி நாள் என்பதால் பணத்தை கட்ட சென்ற பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் மேலும் ரூ.6 ஆயிரம் செலுத்துமாறு கூறியது. 4, 5-ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் கூட ரூ.8,500 செலுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
பெறறோர்கள் அவசரம், அவசரமாக ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து செலுத்தியபோது ரூ. 4 ஆயிரத்துக்கு ஒரு டிராப்ட் பெயரில் பில் போடப்பட்டது. மீதி தொகைக்கு பின் பில் தருகிறோம் என கூறி பெற்றோர்களை திருப்பி அனுப்பி விட்டது. பாளையில் உள்ள மற்றொரு மெட்ரிக் பள்ளி இவ்வாண்டு பல மாணவர்களுக்கு தேர்ச்சி அட்டைகளை அனுப்பவில்லை. பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்ததில் கடந்த ஆண்டு பாக்கி தொகையை முழுமையாக கட்டினால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அரசு அறிவிப்பின்படி கடந்த ஆண்டு பல பெற்றோர்கள் குறைவான கட்டணத்தை கட்டியது குறிப்பிடத்தக்கது.
பழைய கட்டணத்தோடு, புதிய கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருப்பதால் பல பெற்றோர்கள் இப்போதே நகைகளை அடகு வைக்கத் துவங்கிவிட்டனர். பள்ளிகள் துவங்கும் முன்பே வசூலிக்கப்படும் இத்தகைய கட்டணங்களால் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர்.
No comments:
Post a Comment