Friday, January 20, 2012

*பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.*


*சந்தேகமின்றி ஒருவிசுவாசி, எல்லா நிலைகளிலும் எங்கிருந்த போதிலும் அவனுடைய இறைவனிடமே பிரார்த்திக்கவேண்டும். *அந்த தூய்மையான இறைவன் தன் அடியார்களுக்கு மிக சமீபத்தில் இருக்கின்றான். உயர்வானவனாகிய அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். 

*(நபியே!) என்அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவேஇருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால்விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையேநம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 02:186) 

*இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான்* * நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான்உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும்பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம்புகுவார்கள். (அல்-குர்ஆன் 40: 60) *உயர்ந்தவனாகியஉங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடன் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாகதிருப்பிவிடஅவன் வெட்கப்படுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 


*அல்லாஹ்வின் சந்தோசம்* "உங்களில் ஒருவன் பாலைவனத்தில் தனது ஒட்டகையை காணாமலாக்கி விட்டு பின்னர் அது கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவானோ அதனை விட அல்லாஹ் தனது அடியான் பாவமன்னிப்புக் கோருவதால் சந்தோஷமடைகிறான்." (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதார நூற்கள்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

*சகோதர சகோதரிகளே இறைவனிடம் நாம் பிராத்திப்போம். யா அல்லாஹ்! நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாதே, அத்தகைய நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர (வேறு) யாரும் என்னை பாதுகாக்க முடியாதே, அத்தகைய கெட்ட செயல்கள்; மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னை (தடுத்து) பாதுகாப்பாயாக! (திர்மிதி) யா அல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (நூல்: முஸ்லிம்) யா அல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்குச் சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையைச் சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து கெடுதிகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்கியருள்வாயாக! (நூல்: முஸ்லிம் ஆமின்.!!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...