Saturday, September 3, 2011

பிசியோதெரபிக்கு நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது.


மருத்துவத்துறையில் “பிசியோதெரபி“ ஒரு வளர்ந்துவரும் பிரிவாக உள்ளது. மருந்து இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுவதாலும், எந்த பக்க விளைவுகளும் இல்லாததாலும் இந்த சிகிச்சையை பல நோயாளிகள் விரும்புகிறார்கள். இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் நன்கு பயிற்சிபெற்ற 5000 பிசியோதெரபிஸ்ட்கள் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இத்துறை நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மேற்கொள்ளும் ஒருவருட பிசியோதெரபி புரொபஷனல் டிப்ளமோ படிப்பாக இருந்தது. ஆனால் தற்போது முக்கிய மருத்துவ படிப்பாக மாறியுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ (டி.பி.டி), பி.எஸ்சி பட்டப்படிப்பு மற்றும் பி.பி.டி. எனப்படும் 4 வருட புரொபஷனல் படிப்பு (இதில் 6 மாதங்கள் இன்டர்ன்ஷிப் உண்டு) போன்றவை. 4 வருட படிப்பில் சேர பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கான சேர்க்கை, மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் மூலம் நடைபெறுகிறது.



இந்தப் படிப்பு பொதுவாக 4.5 ஆண்டுகள் காலஅளவு கொண்டது. எம்.பி.டி. எனப்படும் முதுநிலை பட்டம் படித்தவர்களும் இத்துறையில் நுழையலாம். இத்துறையில் 1 வருட டிப்ளமோ படிப்பை முடித்தவர்களுக்கு முக்கிய மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. டிப்ளமோ முடித்தவர்கள் ஒரு பிசியோதெரபிஸ்டுக்கு உதவியாளராக மட்டுமே பணிவாய்ப்பை பெற முடியும். அவசர சிகிச்சைப் பிரிவு, கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்கள், மறுவாழ்வு மையங்கள், விளையாட்டு கிளினிக்குகள், பிட்னெஸ் மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், உடற்பயிற்சி கல்விப் பள்ளிகள் மற்றும் இன்னபிற மையங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் இப்படிப்பை முடித்தவர்கள் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர். அமெரிக்கா, கனடா, அரபு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாத வருமானம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும். இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Government medical college,

Nagpur (www.iiher.org).

KEM hospital

Mumbai (www.kem.edu)

M S Ramaiah institute of physiotherapy , Bangalore (www.msrmc.ac.in).

JSS college of physiotherapy,

Mysore (www.jssedu.jssonline.org).

Garden city college of physiotherapy,

Bangalore (www.gardencitycollege.edu).

Mahatma Gandhi university medical college

Kottayam (www.mgu.ac.in).

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...