Tuesday, June 28, 2011

ஜப்பான் பூகம்ப சேதம் ரூ.10.50 லட்சம் கோடி

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட கொடிய பூகம்பம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பொருட்சேதத்தின் மதிப்பு ரூ 10 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் மிகப்பெரிய பூகம்பமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் விவசாய, மீன்பிடி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், அணு உலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டதால் கதிர் வீச்சு வெளியானது. அந்த அணு உலையே உதவாமல் போய்விட்டது. சாலை, மேம்பாலங்கள், வீடுகள் போன்றவை முற்றிலுமாக அழிந்தன.

இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட பூகம்ப சேதத்தின் மொத்த மதிப்பை அந்த நாட்டு அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, ஜப்பான் பூகம்பத்தின் மொத்த சேத மதிப்பு ரூ.10 லட்சத்து 49 ஆயிரம் கோடி. அதாவது அந்த நாட்டுப் பணம் யென் கணக்கில் 16.9 ட்ரில்லியன் அல்லது 210 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் அணு உலை சேத மதிப்பு சேர்க்கப்படவில்லை.
இந்த சேதத்திலிருந்தும் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள் ஜப்பானியர்கள். மூன்றே மாதங்களில் அந்த சேதங்களை படிப்படியாக சரிசெய்து, அந்த நகரை மக்கள் வாழ்வதற்கு ஏற்ப மாற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...