Thursday, May 19, 2011

தேசிய மீலாத் விழாக்களுக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைந்து வருகின்றது

2600 ஆம் வருட சம்புத்த ஜயந்தி விழாவைக் கொண்டாடும் அரசு ஏனைய சமயங்களினதும் அபிவிருத்திக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். மடவளை மதீனா மத்திய கல்லூரி இஸ்லாமிய மஜ்லிஸ் ஒழுங்கு செய்த இஸ்லாமிய தின விழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரேமதாசா காலம் முதல் தேசிய மீலாத் விழா வருடாவருடம் நடை பெறுகின்றது. இதே போல் ஒவ்வொரு சமயத்திற்கும் தேசிய விழாக்கள் நடத்தப்பட்டு அவ்வப் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன விரிவாக

இது நீண்டகாலமாக நாம் அனுபவித்த உரிமையாகும். ஆனால் தற்போது தேசிய மீலாத் விழாக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. இது அவ்வளவு காத்திரமாகத் தெரியவில்லை. இது விடயமாக நான் ஜனாதிபதியுடன் சுமுகமாகப் பேசி ஒரு நல்ல நிலையை ஏற்படுத்த எண்ணியுள்ளேன்.
அதே நேரம் இலங்கை மக்கள் சமய ரீதியில் மிகச் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனெனில் 2600 வருட புத்த ஜயந்தியைக் கொண்டாடும் இந்த நாட்டில் அதற்குப் பிற்பட்ட சுமார் ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களுக்கு 2600 ற்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் உள்ளன.
இவற்றுள் பல பௌத்த மன்னர்களும் சிங்கள மக்களும் அன்பளிப்புச் செய்த காணிகளில் கட்டப்பட்டுள்ளன. அந்தளவு மதரீதியில் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் வாழும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்- வீரகேசரி

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...