Tuesday, May 10, 2011

தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா

வாஷிங்டன்: புதிய தொழில்நுட்பங்கள், இந்தியா, சீனாவிலிருந்து வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்காவின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.
என்னதான் நல்லவராக செயல்பட ஒபாமா எண்ணினாலும் கூட அவருக்குள் ஓடும் அந்த அமெரிக்க ரத்தம் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கிறது. இந்தியாவையும், சீனாவையும் பார்த்துப் பார்த்து அவர் பொறாமைப்படுகிறார்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரம் என இந்தியாவும், சீனாவும் புதிய சக்திகளாக உருவெடுத்து வருவது குறித்து அவர் அவ்வப்போது அமெரிக்கர்களை உஷார்படுத்தி வருகிறார்.
இண்டியானாவில் உள்ள ஆலிசன் மின் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒபாமா பேசுகையில், அமெரிக்கா எப்போதுமே தொழில்நுட்ப கண்டுபிடிப்பில், வளர்ச்சியில் முன்னோடியாகவே இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமெரிக்காவிலேயே நிகழ வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்துவதை நான் விரும்பவில்லை. அங்கிருந்து புதிய தொழில்நுட்பங்கள் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

உலகம் முழுவதும் நமக்குப் போட்டிகள் அதிகரித்துள்ளன. ஜெர்மனி, சீனா, தென் கொரியா போன்றவை கடும் போட்டியைக் கொடுக்கின்றன. எனவே அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

நாம் மட்டும்தான் வளர வேண்டும், மத்தவன் முட்டாப் பயலாகவே இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்பதை ஒபாமாவின் பேச்சு நிரூபிப்பதாக உள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...