Sunday, February 26, 2012

மிகக் குறைந்த விலை டேப்லெட் கணினிகள் BSNL வெளியிட்டது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்ய

பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R கணினிகளை முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த கணினிகள் விற்பனைக்கு வருகின்றன.



Wednesday, February 22, 2012

நோயாளியைக் காணச் செல்பவன் சுவனப்பூங்காவில் இருப்பவன் போலாவான்


ஒருவன் நோயாளியைக் கானச்சென்று நலம் விசாரித்து வரும்வரை அவன் சுவனப் பூங்காவில் இருப்பவன் போலாவான் என்றும்,

அவனுக்கு எழுபதாயிரம் வானவர்களைக் கொண்டு இறைவன் நிழல் வழங்குவான் என்றும்,


அவன் எழுநூறு நாட்கள் நோன்பு நோற்ற பலனைப் பெறுவான் என்றும்,

அவன் காலையில் நோயாளியின் நலன் விசாரிக்கச் சென்றால் மாலைவரை அவனுக்காக வானவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவர் என்றும்,


மாலையில் சென்றால் அடுத்த நாள் காலைவரை அவ்விதம் செய்வர் என்றும்,

அவன் நோயாளியின் நலம் விசாரிக்கத் தன் இல்லம் விட்டுப் புறப்பட்டுவிட்டால் அவனையும் நோயாளியையும் அல்லாஹ்வின் அருள் சூழ சூழ்ந்துகொள்ளும் என்றும்,

Friday, February 3, 2012

உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்


உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...