பக்கங்கள்

Sunday, March 4, 2012

ஒரு நல்லடியார் மற்றொரு நல்லடியாருக்கு செய்ய வேண்டிய கடமை

 

ஒரு நல்லடியாரை சந்தித்தால் அவருக்கு "ஸலாம்" சொல்லுங்கள்.

அவர் விருந்துக்கு அழைத்தால், அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அவர் அறிவுரை வழங்கக்கோரினால், அவருக்கு அறிவுரை வழங்குங்கள்.

அவர் உடல் நலம் குன்றி இருந்தால், அவரை சென்று பாருங்கள்.

அவர் மரணித்து விட்டால், அவருக்காக நடக்கும் "ஜனாஸா" தொழுகையில் கலந்து கொள்ளுங்கள்.

என ஒரு நல்லடியார் மற்றொரு நல்லடியாருக்கு செய்ய வேண்டிய கடமைகளாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

2012 - புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்


Friday, March 2, 2012

மின்சாரத்திற்கு புதிய ஏற்பாடு! - ஒளிரப்போகிறதா தமிழ் நாடு!

மாநிலமே, இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரியசக்தியின் மூலம் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உருவாக்கி தந்துள்ளது. அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், முதற்கட்டமாக, 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு 1கிலோவாட் சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் பேனல்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதன்மூலம் 2 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1000 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.