Tuesday, May 31, 2011

சவூதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

Indian Workers
ரியாத்: சவூதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

Monday, May 30, 2011

மிக்க நன்றி (அல்ஹம்துலில்லா)

உங்கள் முஹம்மது பந்தர் இணையம் ஆரம்பம் செய்து 45-வது நாளில் 10000 பார்வையளர்கள் பார்த்துள்ளனர்(அல்ஹம்துலில்லா-எல்லா புகழும் அல்லாவுக்கே).உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.மேலும் உங்களுடைய ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மிக விரைவில் முஹம்மது பந்தர் இணையம்(WebSite) www.mohamedbunder.tk

மேலும் உங்களுடைய கருத்துகளை mohamedbunder1@gmail.com என்ற முகவரியில் தொரிவிக்கலாம்.

Sunday, May 29, 2011

துபை -எலெக்டிரிகல்,மெகானிக்கல் பொறியாளர்கள் தேவை

துபையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு எலக்டிரிகல் மற்றும் மெகானிக்கல் இன்ஜீனியர்கள் தேவைப்படுகின்றனர்.

டிசைனிங் மற்றும் எஸ்டிமேசனில் அனுபவம் இருப்பவர்கள் மட்டும் தங்களது விபரங்களை

eec12@energy.ae என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பவும்.

Saturday, May 28, 2011

துபை - விற்பனை முகவர்கள் தேவை

துபையில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக் விற்பனை கடைக்கு விற்பனை முகவர்கள் தேவை..விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

Position : Sales Executive
Job Location : Dubai, UAE
No. Of Open Position : 100

Domain Experience : Home Appliance / Electronics / GPS / Home Security ( Door Phones & CCTV ) / IT & MP3 / Photography / Telecom / Watch
Minimum 6 – 12 month experience in of the above domain . SHOULD BE ONLY FROM ANY OF THE LEADING ELECTRONIC RETAILER
Salary : AED 2250/- take home per month + Incentives ( average of AED 750 /- per month upon target achievement )
Benefits : Air Ticket + Medical + Free pick-up and drop for work place
Please ask the candidate to e-mail the documents listed to junaid.kuravle@morgenall.com

1. Latest resume
2. 1 passport size photograph with white background
3. Scanned copy of passport
For more clarity call me +971 4 3583777 ( Dubai Number )
Regards
Junaid Kuravle

துபை வேலை வாய்ப்பு செய்திகள்

துபை -எலெக்டிரிகல்,மெகானிக்கல் பொறியாளர்கள் தேவை
துபையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு எலக்டிரிகல் மற்றும் மெகானிக்கல் இன்ஜீனியர்கள் தேவைப்படுகின்றனர்.

டிசைனிங் மற்றும் எஸ்டிமேசனில் அனுபவம் இருப்பவர்கள் மட்டும் தங்களது விபரங்களை

eec12@energy.ae என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பவும்.

Wednesday, May 25, 2011

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.
 
“அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6307

Tuesday, May 24, 2011

வேலை வாய்ப்பு செய்திகள

ஞாயிறு, 22 மே 2011 22:54 Employment துபை - விற்பனை முகவர்கள் தேவை

துபையில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக் விற்பனை கடைக்கு விற்பனை முகவர்கள் தேவை..விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

Position : Sales Executive
Job Location : Dubai, UAE
No. Of Open Position : 100

Domain Experience : Home Appliance / Electronics / GPS / Home Security ( Door Phones & CCTV ) / IT & MP3 / Photography / Telecom / Watch

Minimum 6 – 12 month experience in of the above domain . SHOULD BE ONLY FROM ANY OF THE LEADING ELECTRONIC RETAILER

Salary : AED 2250/- take home per month + Incentives ( average of AED 750 /- per month upon target achievement )

Benefits : Air Ticket + Medical + Free pick-up and drop for work place

Please ask the candidate to e-mail the documents listed to junaid.kuravle@morgenall.com

1. Latest resume
2. 1 passport size photograph with white background
3. Scanned copy of passport

For more clarity call me +971 4 3583777 ( Dubai Number )
Regards
Junaid Kuravle

கண்ணீர்தான்

பாருங்கள் ஒரு இளையன்னின் கனவு எப்படி போகிறதென்று" வெளிநாடு " வெளிநாடு "யாருக்கு தெரியும் இந்த நிலைமை ????? நாமெல்லாம் ஒரு கைநிறைய சம்பாதிக்கிறோம் என்கவேனுமானாலும் போகலாம் வரலாம்"ஆனால் இங்க இரண்டு முன்று வருடத்துக்கு ஒருமுறைதான் விடுதலை கிடைக்குது அதுவும் கவலையோடு போவது கவலையோடு வருவது " ''''''' என் உணர்வாக நான் சொல்கிறேன் அரபியன் என்பது ஒரு பாலை வனம் ஆனால் இந்த கடல் மட்டும் வற்றவில்லை ஏன் தெர்யுமா????? அந்த கடல் நீரானது நம் உறவுகளின் கண்ணீர்தான்.

Sunday, May 22, 2011

மத்திய அரசு நிறுவனம் சார்பில் சென்னையில் ஒரு மாத வேலைவாய்ப்பு பயிற்சி

சென்னையில் மத்திய அரசு நிறுவனம் சார்பில் ஒரு மாத கால வேலைவாய்ப்பு பயிற்சி நடத்தப்படுகின்றது.

மத்திய அரசின் குறு, சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டுக் கழகம் செயல்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் சார்பில் ஒரு மாத கால சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதில் கைப்பேசி பழுது பார்த்தல், பராமரித்தலுக்கான பயிற்சி இன்று(23-ம் தேதி) முதல் ஜுன் மாதம் 22-ம் தேதி முடிய ஒரு மாத காலம் நடை பெறுகின்றது.

ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்ற முஸ்லிம் அமைச்சர் சாலை விபத்தில் உயிரிழந்தார்

Minister Mariam Pichai
திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 

சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது.

இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார். 

கார் சமயபுரம் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென சாலையோரமாக நின்றிருந்த பஸ் மீது கார் பலமாக மோதியது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.


''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)

''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160

Saturday, May 21, 2011

உல‌க‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌ல்

அபுதாபியில் உல‌க‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌ல் க‌ட‌ந்த‌ 2007 ஆம் ஆண்டு திற‌க்க‌ப்ப‌ட்ட‌து. உல‌கின் மிக‌ப்பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல்க‌ளில் ஒன்றான‌ ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌லில் ஒரே நேர‌த்தில் 30,000 பேர் தொழுவ‌த‌ற்கான‌ வ‌ச‌தி கொண்ட‌து. ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் அதிப‌ராக‌ இருந்த‌ ஷேக் ஸையித் பின் சுல்தான் அவ‌ர்க‌ள் ம‌றைவைய‌டுத்து அவ‌ர் இப்ப‌ள்ளியின் அருகில் அட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டார். அமீர‌க‌ வ‌ள‌ர்ச்சிக்கு அரும்பாடுப‌ட்ட‌ அவ‌ர‌து சேவையினைப் போற்றும் வ‌ண்ண‌ம் இப்ப‌ள்ளிக்கு அவ‌ர‌து பெய‌ர் வைக்க‌ப்ப‌ட்ட‌து.
vkalathur.com

இப்பள்ளி முழுக்க‌ முழுக்க மார்பிளால் க‌ட்ட‌ப்ப‌ட்டு, இஸ்லாமிய‌ க‌ட்ட‌ட‌க்க‌லைக்கு சான்றாக‌த் திக‌ழ்கிற‌து. 22,000 ச‌துர‌ அடி ப‌ர‌ப்பில் இப்ப‌ள்ளி க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. 33,000 ட‌ன் இரும்பு இப்ப‌ள்ளி க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. ப‌ள்ளியைச் சுற்றிலும் ப‌ச்சைப்ப‌சேல் என‌ புல் வெளிக‌ள் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. உல‌கெங்கிலும் இருந்து வ‌ரும் ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளும், அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ப‌ல்வேறு நாட்ட‌வ‌ரும் ஆயிர‌க்க‌ண‌க்கில் இங்கு வ‌ருகை த‌ந்து பிரார்த்திக்கின்ற‌ன‌ர். இப்ப‌ள்ளிக்கு வ‌ருகை புரிவ‌த‌ன் த‌ங்க‌ளுக்கு ம‌ன அமைதியும், இத‌ய‌த்திற்கு இத‌மும் கிடைப்ப‌தாக‌ குறிப்பிடுகின்றன‌ர் இங்கு வ‌ந்து செல்லும் ப‌ல்வேறு நாட்டின‌ர்.

நட்பு பற்றி இஸ்ஸாம்


எவனுடைய கையில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காதவரை நம்பிக்கையாளராகவும் இயலாது. எனவே நான் உங்களுக்கு கூறுகிறேன். அதனை நீங்கள் மேற்கொண்டால் ஒருவர் மற்றவருக்கு நீங்கள் நேசமுள்ளவராக ஆகிவிடுவீர்கள். அதாவது, உங்களுக்கிடையில் ஸலாம் கூறுவதை பழக்கத்தில் கொண்டுவாருங்கள் என்று நபி அவர்கள் கூறினர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

எனக்காக நட்புக்கொண்டவர்கள் எங்கே? இன்று நான் அவர்களுக்கு என்னுடைய நிழலில் இடமளிப்பேன். இன்று என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழல் கிடையாது என்று மறுமை நாளில் இறைவன் கூறுவான் என நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: முஸ்லிம் முஅத்தா

Thursday, May 19, 2011

மெரீனாவில் மாயமான சிறுமி மீட்பு: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் காணாமல் போன 5 வயது சிறுமி தம்மன்னா மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். அவரது மனைவி ஹசீனா. அவர்களுக்கு தம்மன்னா, ரிகாத் என்னும் 5 வயது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.


ஜெ. பதவியேற்பு விழா-மோடி வந்ததால் புறக்கணித்த மனிதநேய மக்கள் கட்சி!

திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்கும் விழாவை, நாங்கள் புறக்கணிக்கவில்லை. குஜராத் கலவரத்தில் குற்றவாளியாக சுப்ரீம் கோர்ட் அறிவித்த நரேந்திர மோடி அந்த விழாவில் பங்கேற்றதால் நாங்கள் செல்லவில்லை. அ.தி.மு.கவுடன் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றதை இலங்கை ராணுவ ரவுடிகளால் பொறுத்துக் கொள்ள முடியததால் தான் அன்று நள்ளிரவு நேரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுர மீனவர்கள் விக்டஸ், ஆண்டனிராஜ், மாரிமுத்து, ஜான்பாலை கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

தேசிய மீலாத் விழாக்களுக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைந்து வருகின்றது

2600 ஆம் வருட சம்புத்த ஜயந்தி விழாவைக் கொண்டாடும் அரசு ஏனைய சமயங்களினதும் அபிவிருத்திக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். மடவளை மதீனா மத்திய கல்லூரி இஸ்லாமிய மஜ்லிஸ் ஒழுங்கு செய்த இஸ்லாமிய தின விழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரேமதாசா காலம் முதல் தேசிய மீலாத் விழா வருடாவருடம் நடை பெறுகின்றது. இதே போல் ஒவ்வொரு சமயத்திற்கும் தேசிய விழாக்கள் நடத்தப்பட்டு அவ்வப் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன விரிவாக

Wednesday, May 18, 2011

வேலை வாய்ப்பு செய்திகள்

AL DAWA MEDICAL SERVICES CO.RIYADH என்ற நிறுவனத்திற்கு 8 டிரைவர்கள் தேவை. தொடர்பு கொள்ள வேண்டிய நபர்
MR. GHULAM MOHAMMED KHAN
Sales Manager

Landline # 01-4389009
Mobile # 0508527433

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Pineapple
பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். 

இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..

Tuesday, May 17, 2011

ஜெயலலிதாவால் வெளிவந்த ரூ.1.3 கோடி உர ஊழல்: 5 அதிகாரிகள் அதிரடி கைது


Agriculture Office
கரூர்: அரசிடமிருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று அதை தனியார் நிறுவனங்களுக்கு விற்று பல கோடி மோசடி செய்த திருச்சி, கரூர் மாவட்ட விவசாயத்துறை அதிகாரிகள், காகிதபுரம் காகித தொழிற்சாலை அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கரூர் மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் காகித ஆலையை மையமாக வைத்து நடந்த இந்த ஊழல் குறித்து புகார் எழுந்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

5 வயது சிறுமியை காணவில்லை!


சென்ற வாரம் (11.05.2011) சென்னை மெரினா பீச்க்கு தன் தாய் மற்றும் சகோதரனு...டன் வந்த தமன்னா என்ற 5 வயது சிறுமி தன் அண்ணனுடன் அவளது தாயின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்த பொழுது திடீரென மாயமானாள். குழந்தையை எங்கும் தேடியும் கண்டு பிடிக்க முடியாத அவளது தாய் காவல்நியைலத்தில் புகார் அளித்தார். காணமல் போன குழந்தையை அவளது தந்தை ஸெய்யது நூர் அஹ்மது மற்றும் அவளது உறவினர்கள் இன்னும் தேடி வருகிறார்கள். தினமும் காலை 7 மணிமுதல் இரவு வரை அவளது பெற்றோர்கள் கண்ணீருடன் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் தேடி வருகின்றனர். பீச் அருகிலுள்ள மீனவர்களின் குடிகளில் எல்லாம் தேடி விட்டனர். இதுவரை கிடைக்கவில்லை. எல்லா பத்திரிக்கை மற்றும் டிவிகளிலும் இது சம்பந்தமாக சிறுமி தமன்னாவின் பெற்றோர்கள் கண்ணீருடன் பேட்டி கொடுத்துள்ளனர். தனது மகளை கடந்த ஒரு வாரமாக பறிகொடுத்து விட்டு துடிக்கும் அந்த தாயால் பேச முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறுகிறார். அவளது தந்தை மிகுந்த வேதனையுடன் பேட்டி அளித்த செய்தி வசந்த டிவியில் வந்தது. யாராவது இந்த குழந்தையை கண்டால் தயவு செய்து 09789929297 or 09677161672 இந்த எண்ணில் தெரிவிக்கவும். சிறுமியின் தாய் மொழி உருது.

கட்டண வசூலில் மெட்ரிக் பள்ளிகள்: நகைகளை அடகு வைக்கும் பெற்றோர்

School Kids
நெல்லை: விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 13 தினங்களே உள்ள நிலையில் மெட்ரிக் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றன.

கோடை காலம் முடிந்தவுடன் நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை களை கட்டும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பிரபலமான பள்ளிகளில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தங்களி்ன் வருமானத்தை பெருக்கிக்கொள்ள இப்போதே வசூலில் இறங்கிவிட்டன.

கேட்பாரற்று கிடக்கும் மக்கள் வரிப்பணத்தின் 500 கோடி - புதிய தலைமைச் செயலகம்!

ரூ. 500 கோடி செலவில் கட்டப்பட்ட எப்பொழுதும் பரபரப்பாக இருந்துகொண்டிருக்கும் புதிய தலைமைச்செயலக வளாகம், இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. பொதுமக்கள் சுற்றித் திரியும் காட்சியகமாக மாறியுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள, அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்திலிருந்து அமைச்சர்களின் அலுவலகங்கள், அரசுத் துறை செயலர் அலுவலகங்கள் மற்றும் இதர பிரிவுகள் அனைத்தும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளன. வெறிச்சோடிக்கிடக்கும் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தைப் பார்க்க பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து, காலியாகக் கிடக்கும் முதலமைச்சர் அறை, தலைமைச் செயலர் அறை, துணை முதல்வர் அறை மற்றும் துறைச் செயலர்களின் அறைகளை ஜாலியாக பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

Monday, May 16, 2011

இஸ்லாம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி 1412

Sunday, May 15, 2011

ஹஜ் பயணிகள் குலுக்கல் தள்ளிவைப்பு!


நடப்பு 2011ஆம் ஆண்டில், தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணத்திற்கு செல்லும் யாத்ரீகர்களை தேர்வு செய்வதற்கான குலுக்கல், நாளை 17அம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் இக்குலுக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில ஹஜ் குழு உறுப்பினர், செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், வரும் 17ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஹஜ் பயணிகள் தேர்வு, வரும் 24ம் தேதி சென்னை புதுக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆணைக்கார் அப்துல் சுக்கூர் கலையரங்கில் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

WALK-IN INTERVIEW FOR A LEADING ELECTRONIC RETAILER IN DUBAI, UAE


Position : Sales Executive
Job Location : Dubai, UAE
No. Of Open Position : 100

Domain Experience :  Home Appliance / Electronics / GPS / Home Security ( Door Phones & CCTV ) / IT & MP3 / Photography / Telecom / Watch
                Minimum 6 – 12 month experience in of the above domain . SHOULD BE ONLY FROM ANY OF THE LEADING ELECTRONIC RETAILER
                Salary : AED 2250/- take home per month + Incentives ( average of AED 750 /- per month upon target achievement )
                Benefits : Air Ticket + Medical + Free pick-up and drop for work place
Please ask the candidate to e-mail  the documents listed to retail@morgenall.com or junaid.kuravle@morgenall.com
1.            Latest resume
2.            1 passport size photograph with white background
3.            Scanned copy of passport
Forward this email to your friends within the ELECTRONIC RETAIL and help them to attend the interview………WE NEED 200
For more clarity call me +971 4 3583777 ( Dubai Number )
Regards
Junaid Kuravle

நன்றி
Darvesh (Dubai)

இன்று முதல் மருத்துவம், பி.இ. படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோக

சென்னை: பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆப் மார்க் அதிகரித்துள்ளது. பி.இ. படிப்பில் கட் ஆப் மார்க் 198-க்கு மேல் எடுத்தவர்களுக்குத் தான் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இதேபோன்று எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு கட் ஆப் மார்க் 199.25-க இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பி.இ. படிப்பிற்கான விண்ணப்பங்கள் கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட 62 இடங்களில் கிடைக்கும். இதற்காக 2.20 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 500. இம்முறை சனி, ஞாயிறு விடுமுறையின்றி இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மாணவர்கள் www.annauniv.edu/tnea2011 என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி மாலை 5. 30 மணிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு வந்து சேர வேண்டும்.

Saturday, May 14, 2011

மரண செய்திகள்

அஸ்ஸாலமு அலைக்கும்(வரஹ்)
14/05/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) வடக்குத் தெருவை சேர்ந்த பெரிய ஹிஜ்ரத் ”மர்ஹிம்”கவூஸ் ஆலிம் அவர்களின் மகளும்,  ”மர்ஹிம்”  K.A.சுபகான் அவர்களின் மனைவியும்மான  கமருன்னிசா அவர்கள் இன்று காலை 8 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜணாஜா இன்று மாலை 05 :30 மணியளவில் நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி(வலிமா)


அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லா

எங்களின் ஆருயிர் நண்பன் 

S.அஹமது முஹையதீன் வெட்ஸ் A.அல்மாஸ் சுல்தானா 

அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி(வலிமா)இன்ஷா அல்லா நாளை (15-05-2011)முஹம்மது பந்தர் மதரஸா மன்பவுல் ஹீதாவில் நடைப்பெற உள்ளதால் தாங்கள் அனைவரும் வருகைப்புரிந்து மணமக்களை வாழ்த்தி எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்வோம்.

வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
R.சலாவுதீன் A.பரக்கத் அலி J.கியாசுதீன் S.சாகுல் ஹமீது
மற்றும்
முஹம்மது பந்தர் நண்பர்கள்

Friday, May 13, 2011

தி.மு.க.,வின் கோட்டை தஞ்சை மாவட்டத்தில் விழுந்ததா ஓட்டை?


கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் இருந்த, 10 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., ஐந்து இடங்களிலும், தி.மு.க., கூட்டணி ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போது, தொகுதி மறுசீரமைப்பில், எட்டு தொகுதிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக, தஞ்சை மாவட்ட நிலவரம்: தஞ்சாவூர்: தி.மு.க., சார்பில், வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லாவும், அ.தி.மு.க., சார்பில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலர் வக்கீல் ரெங்கசாமியும் மோதினர்.

தொடர்ந்து 17 ஆண்டுகள், எம்.எல்.ஏ.,வாகவும், இதில் ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்தும் உபயதுல்லா எந்த ஒரு வளர்ச்சி பணியையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், தி.மு.க.,வின் கோஷ்டி பூசல், வேட்பாளர் மீதான அதிருப்தி, தொகுதி மறுசீரமைப்பால் மாறிய பகுதிகள் தங்களை கரை சேர்க்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர்.இன் நிலையில் தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட தஞ்சையில், அ.தி.மு.க., 20 ஆண்டுகளுக்கு பிறகு தொகுதியை கைப்பற்றியது.


அ.தி.மு.க வேட்பாளர் எம்.ரெங்கசாமி 75,415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருவையாறு: அதிமுக வேட்பாளர் எம்.ரெத்தினசாமி வெற்றி


மே 13:  திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.ரெத்தினசாமி 13 ஆயிரத்து 248 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பூதலூர் ஒன்றியச் செயலர் கூத்தூர் எம். ரத்தினசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை கொண்டாடும் வகையில் அதிமுக பிரமுகர்கள் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். வெற்றி குறித்து ரத்தினசாமி கூறியது:


அதிமுக தொண்டர்கள், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி பகுதியின் பொறுப்பாளர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் திருவையாறு தொகுதியின் அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக சாலை, மின்சாரம், குடிநீர், மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள் நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!


Vadivelu
சென்னை: திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் வடிவேலு என்றால் அது நிச்சயம் மிகையாகாது. அந்த அளவுக்கு வடிவேலுவின் வாய்தான் திமுகவுக்கு இயல்பாக வந்திருக்கக் கூடிய ஓட்டுக்களையம், அதிமுக, தேமுதிக பக்கம் திருப்பி விட்டிருப்பதாக கூறப்படுகிறது.


திமுகவின் அரசியல் வரலாறு மிகப் பெரியது. எத்தனையோ பெரும் தலைவர்களைக் கண்ட இயக்கம் அது. அன்பழகன் என்ற நாவுக்கரசர் நடமாடும் கட்சி இது. அதேபோல நெடுஞ்செழியன் என்ற மாபெரும் பேச்சாளரைக் கண்ட இயக்கம் இது. மண்ணை நாராயணசாமி, கே.ஏ.மதியகழன் என்று பல பேச்சுப் பொறியாளர்களைக் கொண்ட இயக்கம் இது.

பல மாவட்டங்களில் திமுக கூட்டணி 'வாஷ்-ஆவுட்'!


நெல்லை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பல மாவட்டங்களில் 'வாஷ்-அவுட்' ஆகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த முறை 10 தொகுதிகளில் எட்டு தொகுதிகளைத் தக்க வைத்த கூட்டணி இம்முறை 1 தொகுதியிலும், தூத்துக்குடி 1 தொகுதியிலும், குமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 தொகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும், புதுக்கோட்டையில் ஜீரோவையும், சிவகங்கை மாவட்டத்தில் ஜூரோவையும், திருவாரூரில் 2 தொகுதிகளிலும், திருச்சியில் 1 தொகுதியிலும், நாகையில் ஜூரோவையும், பெரம்பலூரில் 1 தொகுதியிலும், கரூரி்ல் 1 தொகுதியையும், திண்டுக்கல்லில் 2 தொகுதியையும், நீலகிரியில் 2 தொகுதிகளையும்,

துபாய்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து தமிழக வாலிபர் தற்கொலை


Dubai Burj Kalifa Building
துபாய்: துபாயில் உலகின் உயரமான கட்டடத்திலிருந்து குதித்து சிவகங்கையைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. 2,716 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் மொத்தம் 160 மாடிகளைக் கொண்டது. இதில் 45 மற்றும் 108 மாடிகளில் வீடுகளும், மற்ற 158 மாடிகளிலும் கார்ப்ரேட் நிறுவன அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. 
இதில் அராப் டெக் என்ற கட்டுமான நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதியமான் கண்ணன் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவன அலுவலகம் 120வது மாடியில் உள்ளது.

எந்தத் துறையை எடுக்கலாம் எஞ்சினியரிங்?(வீடியோ)



அன்பு நண்பர்களே..,
இந்த பதிவு TYPE OF ENGINEERING COURCES( BE - Bacholer of Engineering) என்பதை பார்போம்.
எஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது.

திமுக தோல்வியடைய என்ன காரணம்?

அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.
திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.
திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்:
1. மின்வெட்டு
தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Wednesday, May 11, 2011

இலவச விடுதி வசதியுடன் பிளஸ்-1, பிளஸ்-2 கல்வி

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: 

1,136 மதிப்பெண்கள் எடுத்தும் மேற்படிப்புக்கு வசதியில்லாத நிலையில் ஏழை மாணவி

திருப்பூர்: பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1,136 மதிப்பெண் பெற்றிருந்தபோதிலும் படிக்க வசதி இல்லாததால் பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் மாணவி ரேமகாவதி.

மாணவி ரேமகாவதி

திருப்பூரைச் சேர்ந்தவர் மாணவி ரேமகாவதி. பிளஸ் டூ தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்தார். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அவரது தந்தை அகால மரணமடைந்தார். பிளஸ் ஒன் படிக்கும் தம்பி, சொற்ப சம்பளத்தில் கூலி வேலை பார்க்கும் தாய் என வறுமை வாட்டியதால் பனியன் கம்பெனி வேலைக்கு செல்லத் துவங்கினார் ரேமகாவதி.

1,136 மதிப்பெண்கள்

ஏ.ஆர். ரஹ்மான்யின் முதல் பாடல்

ஏ.ஆர். ரஹ்மான்யின் முதல் பாடல்


ஏ.ஆர். ரஹ்மான் இரு செய்திகள்
ஆஸ்கர் விருதுக்குப் பிறகு நின்றால் செய்தி, அசைந்தால் ஸ்கூப் என ஆல்டைம் ப்ரேக்கிங் நியூஸாகிவிட்டார் இசைப்புயல். கோடம்பாக்கத்தை இவரைப் பற்றிய இரண்டு செய்திகள் கலங்கடித்துக் கொண்டிருக்கின்றன.

ஆஸ்கர் விருதுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏ.ஆர். ரஹ்மானை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார்கள் வங்கி ஒன்றின் உயர் அதிகாரிகள். அப்போது, எங்களுக்கெல்லாம் லோன் தரமாட்டீர்களா என விளையாட்டாகக் கேட்டிருக்கிறார் இசைப்புயல். விடுவார்களா அதிகாரிகள்? தங்களது மரியாதையை செயல்வடிவில் காட்ட கிடைத்த அரிய சந்தர்ப்பமல்லவா

Tuesday, May 10, 2011

ரியாத் - டிரைவர்கள் தேவை

AL DAWA MEDICAL SERVICES CO.RIYADH என்ற நிறுவனத்திற்கு 8 டிரைவர்கள் தேவை. தொடர்பு கொள்ள வேண்டிய நபர்
MR. GHULAM MOHAMMED KHAN
Sales Manager

Landline # 01-4389009
Mobile # 0508527433

தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா

வாஷிங்டன்: புதிய தொழில்நுட்பங்கள், இந்தியா, சீனாவிலிருந்து வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்காவின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.
என்னதான் நல்லவராக செயல்பட ஒபாமா எண்ணினாலும் கூட அவருக்குள் ஓடும் அந்த அமெரிக்க ரத்தம் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கிறது. இந்தியாவையும், சீனாவையும் பார்த்துப் பார்த்து அவர் பொறாமைப்படுகிறார்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரம் என இந்தியாவும், சீனாவும் புதிய சக்திகளாக உருவெடுத்து வருவது குறித்து அவர் அவ்வப்போது அமெரிக்கர்களை உஷார்படுத்தி வருகிறார்.

Monday, May 9, 2011

சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி

2011-2012 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவியை தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.

  • 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் மாணவர்கள் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறத் தகுதி பெறுவார்கள்.
  • 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 30.06.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Sunday, May 8, 2011

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லா

இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 12-05-2011

S.அஹமது முஹையதீன் வெட்ஸ் A.அல்மாஸ் சுல்தானா
இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு
முஹம்மது பந்தர்.COM , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொது மக்களும்

Saturday, May 7, 2011

துபை நிறுவனத்திற்கு எலக்டிரிசியன், பிளம்பர், ஏசி டெக்னிசியன் , பெயிண்டர் தேவை

துபை ஜெபல் அலியில் உள்ள இம்தாத் என்ற நிறுவனத்திற்கு எலக்டிரிசியன், பிளம்பர், ஏசி டெக்னிசியன் , பெயிண்டர் தேவை.

சம்பளம் - 1500 திர்ஹம் மற்றும் உறைவிடம்

உணவுக்காக 350 திர்ஹம் வழங்கப்படும்

உங்களது விபரங்களை
recruitment@imdaad.aeஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற முகவரிக்கு அனுப்பவும்

Friday, May 6, 2011

சென்னை மக்கா மஸ்ஜிதில் இந்த வார ஜுமுஆ உரை.

அஸ்ஸலாமு அலைக்கும்,


ஷேக் உஸாமா பின் லேடன் (ரஹ்) அவர்களுக்காக சென்னை மக்கா மஸ்ஜிதில் இந்த வார ஜுமுஆ உரை(06.05.2011)
ஜும்மா குத்பா தலைப்பு :
ஜெயித்தது யார் ? ஒபாமாவா ? ஒசாமாவா?

என்ற தலைப்பில்
மௌலானா ஷம்சுதீன் காஸிமி  அவர்கள் பேசி வீடியோ 
  
ஜுமுஆவுக்குப்பின் "காயிப் ஜனாஸா" தொழுகை (06-05-2011)இன்று நடந்தது.

மசூதியின் இமாம் மெளலானா சம்சுதீன் தலைமையில் நடந்த இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தொழுகையின்போது பின்லேடனைக் கொன்று கடலில் வீசிய அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய நெறிப்படி பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நன்றி
http://makkamasjid.com/

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லா

இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 16-05-2011

M.ஹசன் குத்தூஸ் வெட்ஸ் J.ஜென்னத்துல் ஃபிரிதவ்ஸ்
இரு மனமும் (திருமணம் என்ற பந்த‌த்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு
முஹம்மது பந்தர்.COM , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொது மக்களும்

திருமண நிகழ்ச்சிகள்


அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லா

இடம் :- மேலக்காவேரி
திருமண நாள் :- 11-05-2011

M.J.M.முஸ்தபா ( பாபு ) வெட்ஸ் J.இலாஹி நிஷா

இரு மனமும் (திருமணம் என்ற பந்த‌த்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு
முஹம்மது பந்தர்.COM , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொது மக்களும்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
Related Posts Plugin for WordPress, Blogger...